www.garudavega.com

கிரிக்கெட் பேட்டோடு சமந்தா.. பிரபல இயக்குனரை TAG செய்து சொன்ன 'குஷி'யான அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமந்தா  தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்‌.

Samantha Shared BTS Image of majili movie Kushi update

விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றவர். ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார். 

நடிகை சமந்தா நடித்த யசோதா படம் தெலுங்கில் உருவாகி கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி வெளியானது. வாடகைத் தாயாக நடிகை சமந்தா இந்த படத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் நடிகை சமந்தா பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். படிக்கட்டுகளில் ஏறி சூடம் மற்றும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தார்.

தற்போது சமந்தா கதாநாயகியாக நடித்துள்ள “சகுந்தலம்” திரைப்படம்  வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். நடிகர் அல்லு அர்ஜீனின் மகள் அல்லு அர்ஹா  இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.

சகுந்தலம் திரைப்படத்தை இயக்குனர் குணசேகர் எழுதி இயக்குகிறார். இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் நடிகை சமந்தா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஜிலி படம் வெளியாகி 4 வருடங்கள் ஆவதையொட்டி அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஷிவ் நிர்வானா உடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "ஐ லவ் யூ ஷிவ நிர்வானா. ஷ்ராவனி கதாபாத்திரத்துக்கு நன்றி. தற்சமயம் ஆராத்யா கதாபாத்திரத்தின் மூலம் அனைவரையும் அசரடிக்கும் நேரம்" என பதிவிட்டுள்ளார்.

Samantha Shared BTS Image of majili movie Kushi update

தற்போது சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை ஷிவ நிர்வானா இயக்கி வருகிறார். ஆராத்யா என்ற தனது கதாப்பாத்திரத்தின் பெயரை சமந்தா தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Tags : Samantha, Kushi

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Shared BTS Image of majili movie Kushi update

People looking for online information on Kushi, Samantha will find this news story useful.