நடிகை சமந்தா, தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகையாக விளங்குபவர். சென்னை பல்லாவரத்தை பூர்வீகமாக கொண்டவர்.
இவர் மாஸ்கோவின் காவேரி படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பானா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், தெறி, கத்தி, சீமராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.
சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒருவரையொருவர் காதலித்து 2017 இல் திருமணம் செய்தனர். அதன் பின்னர் இந்த ஜோடி ரசிகர்களிடம் பிரபலமான ஒன்றாக மாறியது. ஆனால், கடந்த சனிக்கிழமை பிற்பகலில், ஒரு பரபரப்பான அறிக்கையை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அந்த அறிக்கையில் தனது கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மேலும் இருவரும் தனி தனி பாதைகளில் பயணம் செய்யப்போவதாகவும், மேலும் மீடியா, ரசிகர்கள் இந்த கடினமான காலத்தில், எங்கள் பிரைவசியை மதிக்குமாறும் நடிகை சமந்தா கேட்டுக்கொண்டார். இருவரும் பிரிந்ததாக அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை இதுகுறித்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார் அதில் " "பெண்களால் செய்யப்படும் போது சில செயல்கள் தொடர்ந்து கேள்விக்குரியதாக இருக்கிறது, ஆனால் அதே செயல்கள் ஆண்களால் செய்யப்படும்போது தார்மீக ரீதியாக கூட கேள்வி எழுப்பப்படாவிட்டால் - ஒரு சமூகமாக மனிதர்களுக்கு அடிப்படை அறமே இல்லை." என்று எழுதியிருந்தது.
இந்நிலையில் இன்று மதியம் நடிகை சமந்தா டிவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தனிப்பட்ட நெருக்கடியில் உள்ள எனக்கு உங்கள் அன்பு என்னை தெம்பூட்டுகிறது . எனக்கு கள்ளத்தொடர்பு இருந்தன, குழந்தை வேண்டாம் என்றேன், நான் ஒரு சந்தர்ப்பவாதி, நான் கருக்கலைப்பு செய்தேன் என்று வதந்திகள் பரப்புகின்றனர். இது போல் எனக்கெதிராக பொய்யான வதந்திகள் மற்றும் பரப்பப்படும் கதைகளுக்கு எதிராக என் மீது ஆழ்ந்த பச்சாதாபம், அக்கறை காட்டி, என்னை பாதுகாத்த அனைவருக்கும் நன்றி.
விவாகரத்து என்பது மிகவும் வேதனையான செயல். இதில் இருந்து மீள எனக்கு நேரத்தை அனுமதிப்பது ஒருபுறம் இருக்கட்டும். தனிப்பட்ட முறையில் என் மீதான இந்த தாக்குதல், இடைவிடாமல் இருந்தது. ஆனால் நான் இதை கடந்து வருவேன் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன், அவர்கள் சொல்வதை நான் ஒருபோதும் கண்டுகொள்ள மாட்டேன்".
இவ்வாறு அந்த அறிக்கையில் சமந்தா கூறியுள்ளார்.