''எப்போ கண்டுபிடிச்சீங்க ?'' - கர்ப்பமாக இருப்பதாக வெளியான செய்தி குறித்து சமந்தா ரியாக்ஷன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா நடிப்பில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்க, விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

Samantha reaction her Pregnancy rumour

அதனைத் தொடர்ந்து அவர் 'ஓ!பேபி' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பழம் பெரும் நடிகை லட்சுமியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நாக சூர்யா, ஊர்வசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, மிக்கி ஜே.மேயர் இசையமைக்கிறார். இந்த படத்தின் சீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனையடுத்து தெலுங்கு செய்தி நிறுவனம் சமந்தா கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியிட்டு சில காரணங்களையும் வெளியிட்டிருந்தது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரந்த சமந்தா,  'அவளா ? எப்போ கண்டுபிடிச்சீங்க,  எங்களுக்கு சொல்லுங்களேன்' என்று நக்கல் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Samantha reaction her Pregnancy rumour

People looking for online information on Oh Baby, Pregnant, Samantha will find this news story useful.