நடிகை சமந்தா பதிவிட்ட டிவீட் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Also Read | ஆஹா..நஸ்ரியாவின் "லீலா" கேரக்டர் போட்டோ ஷூட்.. வெளியான சூப்பர் புகைப்படங்கள்!
சமந்தா அறிமுகமும் வளர்ச்சியும்…
சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் கவனம் பெற்ற அவர் அதே படத்தின் தெலுங்கு பதிப்பில் கதாநாயகியாக நாக சைதன்யாவுடன் நடித்தார். அந்த படத்தின் வெற்றி அவரை தெலுங்கில் முன்னணி நடிகையாக்கியது. அதன் பின்னர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார். ராஜமௌலி இயக்கத்தில் நானியோடு அவர் நடித்த நான் ஈ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து முன்னணி நடிகையாக்கியது. அதன் பிறகு முன்னணி நடிகர்களோடு அவர் கத்தி, மெர்சல் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 வெப் தொடர் ஆகியவை அவரை மேலும் முன்னணி நடிகையாக்கின.
திருமணமும் விவாகரத்தும்…
சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் கூட தொடர்ச்சியாக நடித்து வந்த சமந்தா சமீபத்தில் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். விவாகரத்துக்குப் பின் தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம், தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா' படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ’புஷ்பா’ படத்தின் ஒ அண்ட்டா வா மாவா பாடலுக்கு நடனமாடி வைரலானார். இந்த பாடல் இந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது.
பரபரப்பு Tweet
இந்நிலையில் இப்போது சமந்தா பகிர்ந்துள்ள டிவீட் ஒன்று இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. அதில் சமந்தா “பெண்கள் பத்திய வதந்தி என்றால் – உண்மை… ஆண்கள் பற்றிய வதந்தி என்றால்- அது பெண்களால் பரப்பப் பட்டது. கொஞ்சம் வளருங்கள். சம்மந்தப்பட்ட நபர்களே அதில் இருந்து வெளியேறிவிட்டோம். நீங்களும் அதைக் கடந்துவரவேண்டும். உங்கள் வேலையிலும், குடும்பத்தின் மீதும் கவனம் செலுத்துங்கள்” என டிவீட் செய்துள்ளார்.
பின்னணி என்ன?
இந்த டிவீட்டுக்குக் காரணம் நடிகர் நாகசைதன்யா மற்றொரு நடிகை ஒருவருடன் தற்போது ‘Dating’-ல் இருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவின. இந்த வதந்தியை சமந்தாவின் தரப்பினர்தான் திட்டமிட்டு பரப்புவதாக சிலர் இணையத்தில் கருத்து தெரிவித்து வந்தனர். அவர்களின் அவதூறுக்கு பதிலளிக்கும் விதமாகதான் சமந்தா இந்த டிவீட்டை பதிவு செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
Also Read | போடு சரவெடிய..சிவகார்த்திகேயன் நடிக்கும் 'PRINCE' படத்தின் வெளியான புதிய ரிலீஸ் தேதி!