இயக்குனர் அட்லி & பிரியாவை நடிகைகள் கீர்த்தி சுரேஷ் & சமந்தா வாழ்த்தியுள்ளனர்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | பச்சை குத்திக் கொண்ட நடிகை சதா.. வீகன் டாட்டூவா..? வைரலாகும் வீடியோ!
ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குனர் அட்லி அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து 3 படங்கள் நடிகர் விஜய்யுடன் பணிபுரிந்தார்.
தற்போது ஷாருக்கான் நடிக்கும்"ஜவான் " படத்தை அட்லி இயக்கி வருகிறார். இயக்கம் மட்டுமல்லாமல் தனது மனைவி பிரியா அட்லீயுடன் இணைந்து 'A for Apple Productions' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி தயாரிப்பாளராகவும் அட்லி வலம் வருகிறார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.
Images are subject to © copyright to their respective owners.
இயக்குனர் அட்லி, தனது மனைவி நடிகை பிரியாவை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி திருமணம் செய்தார். தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது.
இயக்குனர் அட்லி மற்றும் பிரியா அட்லி இருவரும் பெற்றோர்கள் ஆக போகிறார்கள் என்ற செய்தியை அதிகாரப்பூர்வமாக பிரத்யேக ஃபோட்டோ ஷூட் நடத்தி சில நாட்களுக்கு முன் அறிவித்தனர்.
Images are subject to © copyright to their respective owners.
அட்லி & பிரியா தம்பதியருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்லி பிரத்யேக வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளார். அந்த பதிவில், "அவர்கள் சொல்வது சரிதான் 😍 இப்படி ஒரு உணர்வு உலகில் இல்லை ♥️
எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது! பெற்றோர்களாக புதிய அற்புதமான சாகசம் இன்று தொடங்குகிறது!" என பதிவிட்டிருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்த பதிவில் நடிகை கீர்த்தி சுரேஷ், சமந்தா, ரெபா , திவ்யதர்ஷினி, ராம் பொத்தினேனி ஆகியோர் வாழ்த்தினர். கீர்த்தி சுரேஷ் தனது வாழ்த்தில், "ஊரின் புது தாய் தந்தையருக்கு எனது மிகப் பெரிய வாழ்த்துகள். குழந்தையை கடவுள் ஆசிர்வதிக்கட்டும். உங்களை சந்திக்க ஆவலோடு உள்ளேன்" என கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
நடிகை சமந்தா தன்னுடைய வாழ்த்தில், "என்னுடைய அன்பானவர்களுக்கு வாழ்த்துகள்" என கூறியுள்ளார்.
Also Read | “நிஜ வாழ்க்கையில் கெட்டவனே ஜெயிக்கிறான்.. இந்த படத்துல என்ன பார்த்தே பயந்தேன்” - சரவணன்