உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருகின்றனர். பிரபலங்களுக்கும் இதே நிலைமைதான்.
இந்நிலையில் நடிகை சமந்தா சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நெருங்கிய தோழியும் மாடல் அழகியுமான ஷில்பா ரெட்டியுடன் நெருக்கமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போன்று அந்த புகைப்படம் இருந்தது.
இந்நிலையில் தற்போது ஷில்பா ஷெட்டி சமூக வலைத்தளத்தில் தனக்கு கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அவரது கணவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.