பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பாதுகாவலராக பணியாற்றிய அனஸ் குரேஷி என்பவர் அதிகளவு ஸ்டிராய் எடுத்துக் கொண்டதால் நிலை தடுமாறி பாதசாரிகளை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சல்மான் கானிடம் சுமார் 2 ஆண்டுகளாக பாதுகாவலராக பணியாற்றிய அனஸ், தனது சொந்த ஊரான மொராதாபாத்தில் ஜிம்மிற்கு சென்று அதிக வெயிட் தூக்குவதற்காக ஸ்டிராய்டு மருந்துகளை பயன்படுத்தியுள்ளார். அது, ஓவர் டோஸ் ஆன நிலையில், தடுமாறிய அனஸ், தெருவில் வந்து தகராறு செய்து, பாதசாரிகளை தாக்கியும், அங்கிருந்த வாகனங்களை கண்மூடித்தனமாக தாக்கியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதையடுத்து, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகு, சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், மீன் வலையை விரித்து அனஸ்-ஐ அடக்கி, கைகளை கட்டி அருகில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதிக்கப்பட்ட அனஸ்-ஐ பரேலி மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் Mr.மொராதாபாத் சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது இடத்தை பிடித்த அனஸ் குரேஷி, மகாராஷ்டிராவில் அமைச்சர் ஒருவருக்கு பாதுகாவராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
A bodygaurd, reportedly on high dose of steroids, went berserk on a busy street in UP's Moradabad district & attacked several vehicles. Doctors claims that he has lost his mental balance. The high octane drama came to an end after cops finally overpowered him using net and ropes. pic.twitter.com/LmFAvpo0f2
— Piyush Rai (@Benarasiyaa) September 26, 2019