VIRAL VIDEO: 'ஊர்வசி ஊர்வசி.. TAKE IT EASY POLICY' - சல்மானுக்கு டான்ஸ் கிளாஸ் நடத்திய பிரபுதேவா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது ‘தபாங் 3’ திரைப்படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக நடித்து வருகிறார்.இதனிடையே, பிரபுதேவாவின் சூப்பர்ஹிட் தமிழ் பாடலுக்கு சல்மான் கான் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Salman Khan taking dance lessons from Prabhudeva for Urvashi Urvashi song, video goes viral

சோனாக்ஷி சின்ஹா, அர்பாஸ் கான், மஹி கில், கிச்சா சுதீப் ஆகியோர் நடித்து வரும் இப்படத்தை நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா இயக்கி வருகிறார். ‘தபாங்’ சீரிஸின் மூன்றாம் பாகமாக உருவாகி வரும் இப்படத்தை சல்மான் கான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் பேனரில் தயாரித்து வருகிறார். இப்படம் வரும் டிசம்பர்.20ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இதனிடையே, வழக்கமாக தான் நடிக்கும் திரைப்படங்களில் பணியாற்றும் கோ-ஸ்டார்களுக்கு பார்ட்டி கொடுக்கும் சல்மான் கான், சமீபத்தில் தனது தபாங் 3 குழுவினருக்கு தனது இல்லத்தில் சர்ப்ரைஸ் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அதில், சல்மான் கான், சுதீப், சாஜித் உள்ளிட்டோருக்கு இந்தியன் மைக்கேல் ஜாக்சனான பிரபுதேவா டான்ஸ் சொல்லிக் கொடுத்தார். கடந்த 1994ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘காதலன்’. இப்படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ‘ஊர்வசி ஊர்வசி’ பாடலுக்கு சல்மான் கான் உள்ளிட்டோர் நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Dance class from the master himself . . Prabhu Deva @kichchasudeepa @wardakhannadiadwala

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

Salman Khan taking dance lessons from Prabhudeva for Urvashi Urvashi song, video goes viral

People looking for online information on Dabangg 3, Kiccha Sudeep, Prabhudeva, Salman Khan will find this news story useful.