மலையாளத்தில் நடிகர் பிரித்வி ராஜ் இயக்கத்தில் வெளியான அரசியல் கிரைம் த்ரில்லர் படம் தான் 'லூசிஃபர்'. இந்த படத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லால் கதாநாயகனாக நடித்து இருந்தார். மேலும், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டொவினோ தாமஸ் ஆகியோரும் இப்படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தின் இயக்குனரான பிரித்வி ராஜ் கெஸ்ட் ரோலில் தோன்றி இருந்தார்.
சிவாங்கியோடு ஓகே கண்மணி ரொமான்ஸ்… குக் வித் கோமாளியில் கலக்கிய நடிகர்!
இந்நிலையில் இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் சிரஞ்சீவி பெற்றிருந்தார். தெலுங்கில் 'காட்ஃபாதர்' என்னும் பெயரில் தயாராகி வரும் இப்படத்தை முதலில் சாஹு படத்தின் இயக்குனரான சுஜித் இயக்குவதாக இருந்தது. அதன்பிறகு வேலைக்காரன், தனி ஒருவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன் ராஜா இப்படத்தினை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.
இதன் இடையே, மோகன்லால் கதாப்பாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்க, பிரித்வி ராஜ் கேரக்டருக்கு யார்? என்ற கேள்வி ரசிகர்கள் இடையே கேள்வி எழுந்தது. இந்நிலையில் இது குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.
சல்மான் கான்
காட்ஃபாதர் படத்தில் பிரித்வி ராஜ் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்காக சல்மான் கான் 12 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டார்களின் சங்கமம்
தமன் இசையமைக்கும் இப்படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்க, மலையாள லூசிபரில் மஞ்சு வாரியர்நடித்த வேடத்தில் பிரபல நடிகையான நயன்தாரா நடித்துவருகிறார். இந்நிலையில் பிரித்வி ராஜ் கேரக்டரில் சல்மான் கான் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. 2017 ஆம் ஆண்டு வெளியான வேலைக்காரன் படத்திற்கு பிறகு மோகன் ராஜா இந்தப் படத்தை இயக்குவதால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிளம்பியுள்ளது.
வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டில் ட்ரோன் பறக்கவிட்ட அஜித்…. வைரலாகும் வீடியோ!