நடிகை ஸ்ருதிஹாசனின் உலகின் பழமையான நாட்டிற்கு சென்றுள்ளார்.
Also Read | "விஜய் தேவரகொண்டா கூட சேர்ந்து ஒரு படம்".. 'PRINCE' சிவகார்த்திகேயனின் வைரல் பேச்சு!
சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஸ்ருதி ஹாசன் முதன்மையானவர். வேலை செய்வது, உணவு சமையல் குறிப்புகளைப் பகிர்வது, தனது பூனை கிளாராவுடன் விளையாடுவது, மற்றும் மேக்கப் மற்றும் பேஷன் சார்ந்த போட்டோ ஷூட் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பகிர்வதை ஸ்ருதி ஹாசன் வாடிக்கையாக கொண்டவர்.
ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடைசியாக 'லாபம்' திரைப்படம் தமிழில் வெளியானது. அடுத்ததாக ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக பிரபாஸுடன் இணைந்து 'சலார்' படத்தில் நடிக்கிறார். இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படுகிறது. மற்ற தமிழ், மலையாளம், இந்தியில் டப் செய்யப்படுகிறது.
கே ஜி எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்குகிறார். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஜனவரி 2021 இல் தெலுங்கானாவின் கோதாவரிகானியில் படத்தின் முதன்மை படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப் படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்கள்.
மேலும் இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் 107வது படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பாலகிருஷ்ணாவை தொடர்ந்து, நடிகர் சிரஞ்சீவியுடன் மெகா154 என தற்காலிக பெயரிடப்பட்டுள்ள படத்திலும் நடிக்கிறார்.
ஒரே நேரத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உடன் ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்ருதி பயணம் செய்வதை விரும்புகிறவர். நடிகை ஸ்ருதி ஹாசன் கிரீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன், தற்போது கிரீஸ் நாட்டில் தொழில் நிமித்தமாக சென்றுள்ள நிலையில், தனது நாட்களை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார்.
கிரீஸ் உலகின் மிக அழகான நாடுகளில் ஒன்றாகும், மேலும் ஸ்ருதிஹாசன் அங்கு செய்யும் பயணங்கள், மக்களின் கலாச்சாரம் மற்றும் உணவு முறைகளை முழுமையாக அனுபவித்து வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அழகான கிரீஸ் நாட்டை புகைப்படங்கள் எடுத்து தனது ரசிகர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் வருகிறார்.
Also Read | Chandramukhi 2 : சந்திரமுகி ஷூட்.. பிரபல இந்திய சினிமா டெக்னீசியன் திடீர் விசிட் ..