www.garudavega.com

பிரபல OTT-யில் மாஸ் காட்டும் சாய் பல்லவி நடித்த புதிய படம்.. வெளியான வேற லெவல் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சாய் பல்லவி & ராணா நடித்த 'விராத பர்வம்' திரைப்படம் ஜூன்17 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

Sai Pallavi Rana Virata Parvam Movie Netflix Trending Number One

Also Read | "மெஹந்தி சர்க்கஸ்" ஹூரோவுடன் வாணி போஜன் நடிக்கும் புதிய படம்.. விக்கி வெளியிட்ட FIRST LOOK!

ராணா டக்குபதி மற்றும் சாய் பல்லவி நடித்த விராத பர்வம் ஒரு தனித்துவமான உள்ளடக்கம் கொண்ட திரைப்படமாகும். இதில் இந்த ஜோடி இதுவரை பார்த்திராத கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

1990களில் நடந்த உண்மைச் சம்பவங்களிலிருந்து ஈர்க்கப்பட்ட ராணா, ஆரண்யா என்ற புனைப்பெயரால் அறியப்படும் தோழர் ராவண்ணாவின் பாத்திரத்தில் நடித்துள்ளார். சாய் பல்லவி, வெண்ணிலாவாக நடித்துள்ளார். விராத பர்வம் போரின் பின்னணியில் ஒரு அற்புதமான காதல் கதையாக வெளியாகி உள்ளது.

Sai Pallavi Rana Virata Parvam Movie Netflix Trending Number One

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் & சினிமா விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது இந்த திரைப்படம் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது. திரையரங்குகளில் வெளியாகி 14 நாட்களில் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படம் நெட்பிளிக்ஸில் வெளியான 5 நாட்களில் நெட் பிளிக்ஸ் ட்ரெண்டில் முதலிடம் பிடித்துள்ளது. இதனை பிரத்யேக போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

Sai Pallavi Rana Virata Parvam Movie Netflix Trending Number One

ஒடிடி ரிலீசை முன்னிட்டு நெட்பிளிக்ஸ்காக சாய் பல்லவி & ராணா பிரத்யேக ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் சிலநாட்களுக்கு முன் கலந்து கொண்டனர்.

Also Read | தீபிகா படுகோனிடம் "I Love You" சொன்ன ரசிகர்.. அதுக்கு தீபிகா கொடுத்த 'நச்' பதில்! வைரல் வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sai Pallavi Rana Virata Parvam Movie Netflix Trending Number One

People looking for online information on Netflix, Rana, Sai Pallavi, Virata parvam Movie will find this news story useful.