நடிகர் மற்றும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மாத இதழில் வந்த தவறான செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ளதாக குறிப்பிட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தமிழின் முன்னணி நடிகர்களை இயக்கியுள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், தமிழின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான தளபதி விஜயின் தந்தை ஆவார். விஜய்யையும் தன் படங்களில் இயக்கியுள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், தற்போது விஜய் மக்கள் இயக்கம் தொடர்பாக நீதிமன்றத்தில் விளக்கம் அளித்து மனு தாக்கல் செய்துள்ளார்.
அதன்படி, விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு விளக்கம் அளித்த விஜய் தரப்பு, எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய மக்கள் இயக்கம் மட்டுமே கலைக்கப்பட்டதாகவும் விஜய் தலைமையில் இயங்கும் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், “வார இதழ் ஒன்றில் என் பேட்டி ஒன்று வந்துள்ளது. நான் எப்போதும் வெளிப்படையாகவே பேசுவேன். என்னை பற்றியும், ‘நான் கடவுள் இல்லை’ என்கிற என் அடுத்த படத்தை பற்றி கேட்டிருந்தார்கள். விஜயகாந்த் பற்றி கேட்டிருந்தார்கள். எல்லாத்தையும் மனம் திறந்து சொல்லியிருந்தேன்.
அதேபோல், என் குடும்பத்தை பற்றி தவறான ஒன்றை - நான் சொல்லாத செய்தியை பதிவிட்டிருக்கிறார்கள். நானும் ஷோபாவும் விஜய் வீட்டுக்கு வெளியில் காரில் காத்திருந்ததாகவும், ஆனால் விஜய் ஷோபாவை மட்டும் உள்ளே வரச்சொன்னதாகவும், அதன் பின் நாங்கள் இருவருமே திரும்பி வந்துவிட்டதாகவும் ஒரு தவறான செய்து வந்துள்ளது. அது உண்மை அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறேன்” என விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் பேசியவர், “எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருப்பது உண்மைதான். அது இல்லை என நான் எப்போதுமே மறுக்க மாட்டேன். இன்னைக்கு பிரச்சனை இருப்பது உண்மை. மற்றபடி அவனும் அவனது தாயும் (அதாவது என் மனைவியும்) எப்பவும் போல பார்த்துக் கொள்கிறார்கள். பேசிக் கொள்கிறார்கள். பழகுகிறார்கள். அவர்கள் இருவருக்கும் இடையில் எவ்வித மனக் கசப்பும் இல்லை. சந்தோஷமாகவே இருக்கிறார்கள்.
அப்பா மகனுக்கு இடையில் கடவுளாலும் NO ENTRY போடா முடியாது 😀 @actorvijay@SunTV @sunnewstamil @polimer88 @BBCBreaking @bbctamil @News18TamilNadu @news7tamil @galattadotcom @behindwoods @igtamil @PTTVOnlineNews @vikatan @maalaimalar @toptamilnews pic.twitter.com/DStU9b9C2h
— S A Chandrasekhar (@Dir_SAC) September 28, 2021
அப்படி இருக்கும்போது அவங்க (ஷோபா) Gate-ல் காத்திருந்ததாக பதிவு செய்திருப்பது தவறு என்பதை பதிவு செய்யவேண்டிய கட்டாயத்தில் நான் இருப்பதால் இதை நான் பதிவு செய்கிறேன். வணக்கம்!” என குறிப்பிட்டுள்ளார்.
Also Read: Thalapathy66-ல் இயக்குநர்.. அறிவிப்பு வெளியான கையோட எங்க விசிட் அடிச்சிருக்காரு பாருங்க!