2018 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் உருவாகி இந்தியா முழுவதும் வெற்றியடைந்த படம் KGF.
Also Read | TRENDING: ஆலியா பட் கூட பிரபல டாப் ஹாலிவுட் நடிகை.. தீயாய் பரவும் சூப்பர் புகைப்படங்கள்
இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கினார். யாஷ் ஹீரோவாக நடித்தார். இந்த படத்தின் வெற்றியைத்தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவானது. ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த 'கே ஜி எஃப் சாப்டர் 2’ திரைப்படம் கடந்த தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) வெளியாகியது. இந்த படம் உலகம் 10,000 திரையரங்குகளில் ரிலீசாகி 1200 கோடி ரூபாய் வசூலை குவித்தது.
'கே.ஜி.எஃப்' படத்தின் முதல் இரண்டு பாகங்களை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல், 'கே.ஜி.எஃப்' பட நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் பிரபாஸ் கதாநாயகானாக நடிக்கும் ’சலார் ’ படத்தை தற்போது இயக்கி வருகிறார்.
இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படுகிறது. மற்ற தமிழ், மலையாளம், இந்தியில் டப் செய்யப்படுகிறது. புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஜனவரி 2021 இல் தெலுங்கானாவின் கோதாவரிகானியில் படத்தின் முதன்மை படப்பிடிப்பு தொடங்கியது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மே மாதம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
சலார் படத்தின் அப்டேட்டுகளுக்காக ‘சலார்’ படத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தை படத்தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த படத்தில் ஆத்யா எனும் கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இந்நிலையில் பிரபாஸ் இந்த படத்தில் "வெங்கட சத்யநாராயணா பிரபாஸ் ராஜூ உப்பளபட்டி" எனும் கதாபாத்திர பெயரில் பிரபாஸ் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பிரபாஸின் நிஜப்பெயர் "உப்பளபட்டி வெங்கட சூர்யநாராயண பிரபாஸ் ராஜூ" என்பதாகும். நிஜப்பெயரில் உள்ள "சூர்யநாராயண" என்பதற்கு பதில் "சத்ய நாராயணா" என சலார் படத்தில் கதாபாத்திரப்பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Also Read | சிம்புவின் வெந்து தணிந்தது காடு.. தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய முன்னணி தயாரிப்பாளர்!