பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ‘நான் கடவுள் இல்லை’ திரைப்படம் உருவாகியுள்ளது.
Images are subject to © copyright to their respective owners
நடிகர் சமுத்தரகனி, சாக்ஷி அகர்வால், சரவணன், இனியா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் எஸ்ஏசி. இப்படத்தின் ரிலீஸ் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் பிப்ரவரி 3-ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்த நிலையில் Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை எஸ்.ஏ. சந்திரசேகர் அளித்துள்ளார். அதில் மகனும், நடிகருமான விஐய் குறித்தும், தனது இயக்குனர் பணி குறித்தும் நிறைய கருத்துக்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
இதனிடையே, வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மேடையில் பேசி இருந்த விஜய், தனக்கு 90 களில் இருந்து போட்டியாளர் ஒருவர் வந்ததாக குறிப்பிட்டு பேசி, கடைசியில் அது ஜோசப் விஜய் என தனது பெயரை குறிப்பிட்டிருந்தார். அவருக்கு அவர் தான் போட்டி என்பதை தான் விஜய் அப்படி குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், கேள்வியாளர், வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் தனது போட்டி யார் என பேசியபோது ஆரம்பத்தில் அஜித்தை தான் குறிப்பிடுகிறார் என கருதியதாகவும், பின்னர்தான் விஜய் தன்னையே போட்டியாளர் என கூறியது புலப்பட்டதாகவும் குறிப்பிட்டு, எஸ்.ஏ.சந்திரசேகரிடம், "நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்?" என்ற கேள்வியை முன்வைத்தார்.
Images are subject to © copyright to their respective owners
இது பற்றி பேசி இருந்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், "விஜய் அப்படி பேசுனத்துக்கான நோக்கம், அவருக்கு அவரு தான் போட்டின்னு எந்த விஷயத்துல சொல்றாருன்னா, இப்ப துப்பாக்கி படம் பண்றாரு. துப்பாக்கி படம் முதல் முறையா 100 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகுது.
Images are subject to © copyright to their respective owners
அந்த படம் 100 கோடிக்கு வியாபாரம் ஆகுதுன்னா, அடுத்த படம் நிச்சயமா 120 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகணும். அப்ப அவரு படம் தான் அவருக்கு போட்டி. அந்த எண்ணத்துல சொல்றாரு. இப்ப 120 கோடியும் ஆச்சு. அடுத்து சர்க்கார் பண்றாருன்னா துப்பாக்கியை விட மேல போணும். அடுத்து தெறி மேல போணும். அத விட மாஸ்டர் அதிகமா போணும். அப்படின்னா அவருக்கு போட்டி அவரு தானே. அவரு சொன்னதுடைய அர்த்தம், அவருடைய படங்கள் தான் அடுத்த போட்டி" என தெரிவித்தார்.