கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று (ஏப்ரல் 21) ஒருநாள் மட்டும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் படி தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர வணிகம் சார்ந்த பிற தொழில்கள் இயங்காது என்பதால் அவதிப்படும் தொழிலாளர்களுக்கு தன்னார்வலர்கள் பலர் உதவி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திரையுலக பிரபலங்களும் உதவி வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''சினிமாவில் வில்லனாக நடிப்பவர்களிடம் வாழ்க்கையிலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு ஏன் செய்வதில்லை என்று கேட்கிறோமா? அது போல ஹீரோக்களிடமும் நீங்க ஏன் இதுக்கு உதவலை அதுக்கு உதவலை என்று கேட்பதும் ஒருவித அறியாமை'' என்று தெரிவித்துள்ளார்.
சினிமாவில் வில்லனாக நடிப்பவர்களிடம் வாழ்க்கையிலும் கொலை கொள்ளை கற்பழிப்பு ஏன் செய்வதில்லை என்று கேட்கிறோமா? அது போல ஹீரோக்களிடமும் நீங்க ஏன் இதுக்கு உதவலை அதுக்கு உதவலை என்று கேட்பதும் ஒருவித அறியாமை. @MaridhasAnswers @onlynikil @_We4U_ @thatsTamil @vikatan @rangats @PTI_News
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) April 21, 2020