www.garudavega.com

"விஜய் மக்கள் இயக்கம் எப்போ அரசியல் கட்சியாக மாறும்?".. பிரபல கோயிலில் S.A.C அளித்த பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.

S A Chandrasekhar Answered about Vijay Makkal Iyakkam Political Entry

Images are subject to © copyright to their respective owners.

Also Read | LEO LEO LEO.. செம்ம ஸ்டைலா.. கெத்தா.. வைரலாகும் பிக்பாஸ் விக்ரமனின் போட்டோ ஷூட் வீடியோ!

Beast படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் 'வாரிசு' படம்  கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கி இருந்தார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். 

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

S A Chandrasekhar Answered about Vijay Makkal Iyakkam Political Entry

Images are subject to © copyright to their respective owners.

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். மேலும் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

S A Chandrasekhar Answered about Vijay Makkal Iyakkam Political Entry

நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நடத்தி வருகிறார். அவ்வப்போது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் விஜய். மேலும் கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

S A Chandrasekhar Answered about Vijay Makkal Iyakkam Political Entry

அப்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய சந்திரசேகர் சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். குறிப்பாக, "விஜய் மக்கள் இயக்கம் எப்போது அரசியல் கட்சியாக மாறும்?" என்ற கேள்விக்கு பதில் அளித்த எஸ்.ஏ. சந்திரசேகர், "கோயிலுக்கு உள்ள வச்சுக்கிட்டு கேட்க வேண்டிய கேள்விகளை கேட்டீங்க என்றால் நான் பதில் சொல்வேன். கோயிலுக்குள் என்ன கேட்க வேண்டுமோ அதை மட்டும் கேளுங்கள். பதில் வரும்" என சந்திரசேகர் கூறினார்.

Also Read | "என் பையன் குடும்பத்துக்கும்".. பிரபல சிவன் கோயிலில் பசு பூஜை செய்த விஜய் தந்தை S.A.C..!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

S A Chandrasekhar Answered about Vijay Makkal Iyakkam Political Entry

People looking for online information on SA Chandrasekhar, Vijay, Vijay Makkal Iyakkam will find this news story useful.