RRR திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி வெளியான நிலையில் 15 நாட்களுக்கும் மேலாக வசூல் சாதனைப் படைத்து வருகிறது.
"அதெல்லாம் பண்ண முடியாது'ங்க.." தொடர்ந்து ஆர்ப்பரித்த ரசிகர்கள்.. மேடையில் கடுப்பான ஆண்ட்ரியா
ராஜமௌலி- ராம்சரண் – ராமாராவ்…
பாகுபலி இரண்டு பாகங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ரிலீசாகியுள்ள படம் "RRR". ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளராக கீரவாணி பணியாற்றினார்.
பிரம்மாண்ட வெளியீடு….
RRR திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் இந்தியா முழுவதும் ரிலீஸானது. இந்த படத்துக்கு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டு இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் 550 அரங்குகளில் திரு சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் வெளியிட்டது. வெளியானது முதல் இந்த படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று நல்ல வசூலை ஈட்டி வருகிறது.
பாகுபலியை மிஞ்சிய வசூல்…
RRR படம் முதல் நாளில் 223 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூலாக ஈட்டியது. இது பாகுபலி படங்களின் முதல் நாள் வசூலை விட அதிகம் ஆகும். அதேபோல் முதல் மூன்று நாளில் 500 கோடி ரூபாயை மொத்த வசூலாக ஈட்டியது. ஒரு வாரத்தில் இந்த படம் 710 கோடி ரூபாயை மொத்த வசூலாக உலகம் முழுவதும் வசூலித்து உள்ளது என்று படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகளவில் 1000 கோடி ரூபாய்…
இதையடுத்து தற்போது இந்த படம் வெளியானது முதல் 16 நாட்களில் உலகளவில் பாக்ஸ் ஆபீஸீல் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் அது கவனத்தை ஈர்த்து வருகிறது.
சோகம்! கலைஞரின் கதை - வசனத்தில் திரைப்படம் எடுத்த இயக்குனர் திடீர் மறைவு..