விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பானாலும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். அதில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினிக்கு இந்த தொடர் மூலம் பல ரசிகர்கள் கிடைத்துவிட்டனர். இதில் நடிக்கும் நடிகர்கள் அனைவர்க்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் வகையில் இந்த சீரியல் இருந்து வருகிறது. படிக்காத கண்ணம்மாவை டாக்டரான பாரதி காதலித்து திருமணம் செய்து கொண்டு வருகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த பாரதியின் அம்மா, கண்ணம்மாவை வெறுக்கிறார். பிறகு கண்ணம்மாவின் பாசத்தால் குடும்பமே அவரை ஏற்றுக்கொள்கிறது.
பாரதி தோழியான வெண்பா இருவரையும் பிரிக்க பல திட்டங்களை தீட்டுகிறார்.பிறகு கண்ணம்மா கர்ப்பமாக இருக்க, பாரதியை தூண்டிவிட்டு இருவருக்கும் இடையே பரச்சனையை வளர்க்கிறார். இதனால் கர்ப்பமான நிலையில் வீட்டை விட்டு வெளியேரிய கண்ணம்மா, சுயமாக சம்பாதித்து வாழ்க்கையை நடத்துகிறார். இப்படி அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து கொண்டு இருக்கும் சமயத்தில் தான் கதையின் நாயகியான ரோஷினி இந்த தொடரை விட்டு வெளியேறினார். தொடர்ந்து சீரியல் பார்த்துக்கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு இது பேரதிர்ச்சியாகவே இருந்தது.
தான் இந்த தொடரில் இருந்து வெளியேறியதற்கான காரணங்களை ரோஷினி பதிவு செய்தார்.மேலும் பாரதி கண்ணம்மா தொடரால் அவர் தவறவிட்ட பட வாய்ப்புகள் பற்றியும் தகவல்கள் வெளிவந்துள்ளது.இந்த வருடம் வெளிவந்து வெற்றிபெற்ற படமான சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவும், ஜெய் பீம் படத்தில் செங்கேனி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும்,பாரதி கண்ணம்மா தொடர் டைரக்டர் ப்ரவீன் வெளிப்படையாக கூறியுள்ளார்.
சீரியல் நடிப்பதற்காக தனக்கு வந்த பல நல்ல வாய்ப்புகளை தவற விட்டாரா ரோஷினி என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.ஒரு நண்பனாக ரோஷினி எடுத்த முடிவுகள் அனைத்துக்கும் தான் ஆதரவு தெரிவிப்பதாகவும் டைரக்டர் ப்ரவீன் கூறியுள்ளார்.இந்த வீடியோக்கள் அனைத்தும் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவுகின்றது.