www.garudavega.com

நடிகை ரோஜா மகள் சினிமாவில் நடிக்க போறாரா? அவரே சொன்ன பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

90 களில் பிரபலமான நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தவர் நடிகை ரோஜா.

Roja Talking about Her Daughter and Son in Tirupati Balaji Temple

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், நடிகர் பிரசாந்த் ஜோடியாக 'செம்பருத்தி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ரோஜா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இதனையடுத்து இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை நடிகர் ரோஜா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திரா மாநிலம் நகரி தொகுதியின் எம்எல்ஏவாகவும், மாநில சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.

Roja Talking about Her Daughter and Son in Tirupati Balaji Temple

ஆந்திரப் பிரதேச சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.கே.ரோஜா தனது 50வது பிறந்தநாளான இன்று (நவம்பர் 17ஆம் தேதி) திருப்பதி திருமலைக்குச் சென்று வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலில் சிறப்புப் பிரார்த்தனை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரோஜா, "எனது பிறந்தநாளையொட்டி திருமலை கோயிலுக்குச் சென்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், ஒய்.எஸ்.ஜெகனின் ஆசியுடன் அரசியலில் வெற்றிகரமாக முன்னேறி வருகிறேன்" என்றார்.

Roja Talking about Her Daughter and Son in Tirupati Balaji Temple

மேலும் "தனது மகனும் மகளும் திரையுலகில் நுழைந்தால் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்" என்று கூறிய அமைச்சர் ரோஜா, "தனது மகள் அன்ஷு மல்லிகா விஞ்ஞானி ஆக விரும்புவதாகவும், படிப்பில் கவனம் செலுத்தி வருவதாக" கூறினார். மேலும், "மகளுக்கு எப்போதும் தனது ஆதரவு இருக்கும் . தனது மகளுக்கு நடிப்புத் துறையில் நுழையும் எண்ணம் இல்லை" என்றும் ரோஜா கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Roja Talking about Her Daughter and Son in Tirupati Balaji Temple

People looking for online information on RKS Roja, Roja, Roja Selvamani, Tirupati will find this news story useful.