ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
Also Read | Kalaga Thalaivan : உதயநிதி நடித்த ‘கலகத் தலைவன்’.. படம் பார்த்துவிட்டு பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்.!
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலியே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன்பிறகு அடுத்த வாரத்தில் ஷெரினாவை மலையாளத்தில் எழுதப்பட்ட பெயர் கார்டை காண்பித்து அவர் எலிமினேட் ஆவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதன் பின்னர் மகேஸ்வரி எலிமினேட் ஆனார். இதனிடையே வைல்டு கார்டு எண்ட்ரியாக மைனா பங்கேற்றுள்ளார்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் விதவிதமான டாஸ்க்குகள் வழங்கப்படும். அவ்வகையில் இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு அரண்மனையாக மாறி இருக்கிறது,. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரத்தை எற்றுள்ளனர். அவ்வகையில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டர், ராணியாக ரச்சிதா, படைத்தளபதியாக அசீம், அரசவை ஆலோசகராக (ராஜகுருவாக) விக்ரமன், இளவரசராக மணிகண்டா ராஜேஷ், இளவரசியாக ஜனனி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ராஜா - ராணிக்காக உணவு சமைக்கும் போது அதில் உப்பை அள்ளிப்போட்டுவிட்டதாக பணியாளர்கள் மீது ரச்சிதா கோபம் கொண்டு சாப்பிடாமல் எழுந்து சென்றுவிட்டார். அதன் பின்னர் இதுகுறித்த விசாரணையில் ராஜகுருவான விக்ரமன், ராணியான ரச்சிதா ஈடுபட்டனர். இதனிடையே கோபமாக கத்திவிட்டு பெட் ரூமுக்கு ரச்சிதா சென்று விட, அப்போது அங்கு ஓடி வந்து ராபர்ட் ரச்சிதாவிடம் சாப்பிட சொல்லி வற்புறுத்தினார். ஆனால் உணவு சாப்பிட கூடியதாக இல்லை என்பதால் ராபர்ட் உணவு செய்தவர்கள் மீதும் கொதித்தார். அத்துடன் ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா நேரத்துக்கு சாப்பிட வேண்டும் என்றும், அவருக்கு உடலில் சிக்கல்கள் இருக்கிறது என்றும் ஹவுஸ்மேட்களிடம் சீரியஸாக கடிந்தும் கொண்டார்.
இந்நிலையில் ராஜா ராணி கெட்டப்பில் இருக்கும் ராபர்ட் மற்றும் ரச்சிதா இருவரும் தில்லானா தில்லானா எனும் முத்து பட பாடலுக்கு டான்ஸ் ஆடக்கூடிய காட்சி பிக்பாஸில் அரங்கேறியுள்ளது. இவர்கள் டான்ஸ் ஆடுவதை சுற்றி உள்ள மற்ற ஹவுஸ்மேட்ஸ் கைத்தட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்துகின்றனர்.
ஏற்கனவே ராபர்ட் மாஸ்டரிடம் நேரடியாகவே பேசியிருந்த ரச்சிதா "ஏன் இப்படி அப்நார்மலாக நடந்து கொள்கிறீர்கள்?. நார்மலாக இருங்களேன். நீங்க என்ன எவ்வளவு கலாய்க்குறீங்க, பதிலுக்கு நான் ஒன்னும் சொல்ல கூடாதா?. ஏன் இப்படி இருக்கீங்க. நீங்க பண்றது குழந்தைத்தனமா இருக்கு. உங்களுக்கு அது தெரியுதா?. எதோ எதிரி மாதிரி Behave பண்றீங்க. எதிர்ல் இருக்கிறவங்களுக்கு எப்படி இருக்கும்ன்னு தெரியுமா?. நீங்க நார்மலா இருங்க" என அட்வைஸ் செய்திருந்தார்.
அதன் பின், ரச்சிதாவிடம் சென்று பேசிய ராபர்ட் , “நீங்கள் நடித்து தானே ஆக வேண்டும் என்கிறீர்கள்.. அப்படி என்றால் என்னை பிடித்தது போல் நடிக்க வேண்டியதுதானே..?” என்று கேட்க, அதற்கு ரச்சிதாவோ, “அப்படி எல்லாம் இருக்க முடியாது. இது பிக் பாஸ் வீடு. அப்படி நடித்தால் தப்பாகிவிடும், அது எப்படி ஒருவரிடம் அப்படி நடிப்பது? நான் நடிப்பதற்காக இங்கு இல்லை. எது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே காட்ட வேண்டும், அவ்வளவுதான்!” என்று கூறியிருந்தார்.
Also Read | Vadhandhi : பிரபல ஓடிடியில் SJ சூர்யா நடித்த ‘வதந்தி’ வெப் சீரிஸ்.! எதுல? எப்போ?