www.garudavega.com

வனிதா திருமணம் விவகாரம்.. ''சிம்பு எனக்கு கொடுத்த அட்வைஸ் இதுதான்'' - ராபர்ட் மாஸ்டர் பளீச்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வனிதா விஜயகுமாரின் திருமண விவகாரத்தில் தனது பெயரை தவறாக பயன்படுத்துபவர்கள் குறித்து ராபர்ட் மாஸ்டர் பேசியுள்ளார். 

வனிதா விவகாரத்தில் சிம்பு கொடுத்த அட்வைஸ் - ராபர்ட் மாஸ்டர் பளீச் | Robert Master opens on Vanitha Vijaykumar Marriage and Simbu's Advice

தமிழ் சினிமாவில் மூத்த நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் தற்போது பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துள்ளார். இதனிடையே பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன், அவர்களின் திருமணத்திற்கு எதிராக புகாரளித்தார். இதையடுத்து வனிதாவின் திருமணம் சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக் ஆனது. 

இதனிடையே தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக இருக்கும் ராபர்ட் மாஸ்டரை வைத்து, இவ்விவகாரத்தில் தவறான செய்திகள் வந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ''நானும் வனிதாவும் எப்போதோ பிரிந்துவிட்டோம். எனக்கு இந்த கதையில் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், சிலர் அவர்களின் ஆதாயத்திற்காக, நான் வனிதா - பீட்டர் பால் திருமணத்துக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததாக சொல்கின்றனர். இதனால் என் குடும்பத்தில் உள்ளவர்களுக்குதான் மனச்சங்கடம் ஏற்படுகின்றது'' என தெரிவித்தார். 

மேலும் இது போல தவறான செய்திகள் தன்னை பற்றி வரும் போது, நடிகர் சிம்பு, ''எதையும் காதில் வாங்கி கொள்ள வேண்டாம். இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுட்டு போ'' என்று அட்வைஸ் கொடுத்ததாகவும் ராபர்ட் தெரிவித்தார். மேலும் தமிழ் நடன இயக்குநர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் போவது பற்றியும் அவர் தனது கருத்தை தெரிவித்தார். 

இதுகுறித்து ராபர்ட் மாஸ்டர் பேசிய முழு வீடியோ இதோ. 

வனிதா திருமணம் விவகாரம்.. ''சிம்பு எனக்கு கொடுத்த அட்வைஸ் இதுதான்'' - ராபர்ட் மாஸ்டர் பளீச். வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

வனிதா விவகாரத்தில் சிம்பு கொடுத்த அட்வைஸ் - ராபர்ட் மாஸ்டர் பளீச் | Robert Master opens on Vanitha Vijaykumar Marriage and Simbu's Advice

People looking for online information on Robert, Robert master, Simbu, Str, Vanitha, Vanitha Vijaykumar Marriage will find this news story useful.