தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.
Also Read | பிக் பாஸ் வீட்டிற்குள் Surprise என்ட்ரி கொடுத்த தனா.. அவங்க கையில் இருந்த டாட்டூவ கவனிச்சீங்களா!!
மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
இதனைத் தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர். மேலும், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி உள்ளிட்டோரும் பிக் பாஸ் வீட்டில் வருகை புரிந்துள்ளனர்.
அப்படி ஒரு சூழலில், பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது தனலட்சுமியும் சர்ப்ரைஸாக நுழைந்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக வலம் வந்த தனலட்சுமி, தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளது பல போட்டியாளர்களை உற்சாகத்தில் திளைக்க வைத்துள்ளது. அனைவரும் அவரை கட்டித் தழுவி வரவேற்றிருந்த நிலையில், பழைய போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வருவது பார்வையாளர்களையும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.
இதனிடையே, ராபர்ட் மற்றும் மைனா நந்தினி ஆகியோரிடையே உரையாடல் தொடர்பான விஷயம், அதிக கவனம் பெற்று வருகிறது. முன்னதாக பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ரச்சிதாவை தொந்தரவு செய்து கொண்டும், ஜாலியாக ஏதாவது பேசிக் கொண்டும் இருப்பார் ராபர்ட் மாஸ்டர். இதனிடையே, தற்போது ரச்சிதாவை பற்றி பேசும் ராபர்ட் மாஸ்டர், "நான் போனதுக்கு அப்புறம் அவளுக்கு Focus கம்மி ஆயிடுச்சு. அப்புறமா இப்போ அவ வெளியே போறதுக்கு 4 நாள் முன்னாடி விக்ரமன் கூட ரெண்டு பேரும் ஒரே கலர் டிரஸ் போட்டு கலாய்ச்சு போனது கொஞ்சம் Funஆ போச்சு" என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசும் மைனா நந்தினி, "நீங்க முன்னாடி சோஃபால இருந்து அப்படியே பாத்துட்டு இருப்பீங்க. அவ ஏதாவது பண்ணிட்டே இருப்பா. எங்களுக்கே அது Funஆ தான் இருந்துச்சு. தப்பா எதுவும் தெரியல. அப்படி தப்பா இருந்துச்சுன்னா அவளே உங்ககிட்ட சொல்லி இருப்பா. வெளிய ஒரு லவ் டிராக் போட்டு ஓடிட்டு இருந்தது தெரியாது" என தெரிவித்தார். தொடர்ந்து, அவர்கள் இருவரும் இன்னும் பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Also Read | தனலட்சுமி வெளியேறியதுனால வருத்தப்பட்ட பிரபல நடிகை.. உள்ள வந்த உடன் தனா சொல்லிய விஷயம்..!