ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கட் தயாரித்து, ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ரன் பேபி ரன். பிப்ரவரி 3-ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், ஆர்.ஜே.பாலாஜி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | கதை சொன்ன RJ பாலாஜி!! “ஏப்ரல்ல Shoot போலாமா?” - பட்டுனு கேட்ட தளபதி விஜய்..! சம்பவம் இருக்கு..
ஏற்கனவே இப்படம் குறித்து பத்திரிகையாளர்கள் நிகழ்வில் பேசியிருந்த ஆர்.ஜே.பாலாஜி, “இந்த படத்தில் 33வது மாடியின் பால்கனி மீது ஏறி நிற்கும் காட்சி ஒன்று இருக்கும். மேலும், அந்த காட்சி நடிக்க கயிறு பயன்படுத்தலாம் என்று கேட்டேன். இல்லை அது யதார்த்தமாக இருக்காது. அதனால் நீங்கள் அப்படியே நில்லுங்கள் என்றார். நானும் பயமில்லாமல் நடித்து முடித்துவிட்டேன். அதுமட்டுமின்றி, நெடுஞ்சாலையில் கார் ஓட்டும் காட்சி அப்போது திடீரென எதிரில் லாரி வந்தது. நான் அவரிடம் சார் லாரி வருகிறதே என்று கேட்டதற்கு “அதை நான் தான் அனுப்பினேன்” என சிரித்துக்கொண்டே வேலை வாங்கிவிட்டார்.
Images are subject to © copyright to their respective owners.
தயாரிப்பாளர் லக்ஷ்மன் சார் பெரிய பொருட்செலவில், நிறைய கலைஞர்களை வைத்து பிரமாண்டமாக தயாரித்துள்ளார்கள். தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். இப்படத்தின் பணியினால் சாம் சி.எஸ். வரவில்லை. ராதிகா மேடமுக்கு நன்றி. இப்படத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு நடிக்க ஒப்புக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நன்றி.
Images are subject to © copyright to their respective owners.
இவர்கள் கூறியதுபோல, நான் மட்டும்தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவன் என்பது அல்ல. ஒரு சராசரி மனிதன், இவ்வளவு பெரிய சண்டைக் காட்சிகளை செய்வானா? என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு தான் இருப்பான். ஒரு வங்கியில் பணியாற்றும் சராசரி மனிதன். அவன் வாழ்க்கையில் ஒரு நாள் நடக்கும் மாற்றம் இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்கக் கூடிய அளவிற்கு திரில்லராக இருக்கும். இறுதிவரை குற்றவாளி யாரென்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.” என கூறியிருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
இதனிடையே ஆர்.ஜே.பாலாஜி தமது அடுத்த படம் குறித்தும் பேசியுள்ளார். அதில், “இந்த வருடத்தில் எனது நடிப்பில் 3 படங்கள் வெளியாகும். ரன் பேபி ரன் படத்திற்கு பிறகு 'சிங்கப்பூர் சலூன்', இன்னொரு படம் இனிமேல் தான் படபிடிப்பு ஆரம்பமாகும். இரட்டை வேடத்தில் நடிப்பதற்கு சில காலம் ஆகும். அசாதாரணமான நடிகரால் தான் ஒரே படத்தில் 4 கதாபாத்திரங்களில் நடிக்க முடியும். 'மைக்கேல் மதன காம ராஜன்' மாதிரி எனக்கும் நடிக்க ஆசை இருக்கிறது. முதலில் ஒற்றை கதாபாத்திரத்தில் உறுதியான ஹீரோவாக ஆன பிறகு தான் அதைப் பற்றி சிந்திக்க முடியும். எனக்கு நிறைய கிரிக்கெட் வீரர்கள் பழக்கம் என்பதால் அவர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்று தோன்றியதில்லை. அனைவரையும் படத்திற்கு தான் அழைப்பேன்” என்றார்.
Also Read | பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவை களமிறக்கும் பிரபல டிவி சேனல்.. கலந்துகொள்ளும் 10 ரியல் ஜோடிகள்..!