நடிகர் மாதவன் நடிப்பில் வெளியாகி இருந்த இறுதிச்சுற்று திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகி இருந்தவர் ரித்திகா சிங்.
பாக்சிங் போட்டியை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் மாதவன் பாக்ஸிங் கோச்சாக வருவார். முதலில் அவருடன் முரண்டு பிடிக்கும் மாணவியாகவும் பின்னர் மாஸ்டர் மீது காதல் கொள்ளும் மாணவியாகவும் நடித்து அசத்தியிருப்பார் ரித்திகா சிங்.
அதே போல, அடிப்படையில் ரித்திகா சிங்கிற்கு பாக்சிங் தெரியும் என்பதால் இந்த கேரக்டர் அவருக்கு மிகவும் அசத்தலாக பொருந்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுக் கொடுத்திருந்தது.
இறுதி சுற்று படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருந்த ஆண்டவன் கட்டளை என்ற திரைப்படத்திலும் நாயகியாக ரித்திகா சிங் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ள ரித்திகா, ஒரு சில தெலுங்கு படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார். அனைத்து படங்களிலும் தனது துறுதுறுவென இருக்கும் நடிப்பின் மூலம் பலரை கவரவும் செய்திருந்தார் ரித்திகா.
அதே போல, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களிலும் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதிகம் பகிர்ந்து வருவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார் ரித்திகா. அது மட்டுமில்லாமல், குத்துச்சண்டை பயிலும் வீடியோக்கள், வொர்க் அவுட் செய்யும் தனது வீடியோக்களும் அவரது டைம் லைனில் நிரம்பி கிடக்கும்.
அந்த வகையில், தற்போது நடிகை ரித்திகா சிங் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். Dumbbells கொண்டு மிகவும் கடினமாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.