பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாட்டுக்கு நடிகை ரித்திகா சிங் நண்பர்களுடன் செம்ம ஜாலி நடனம் ஆடி உள்ளார்.
இயக்குனர் நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்து ஜோனிதா காந்தியுடன் இணைந்து பாடியுள்ளார். 170 மில்லியன் வியூசை இந்த பாடல் கடந்துள்ளது.
மேலும் இசையமைப்பாளர் அனிருத், நடிகை சமந்தா, இயக்குனர் அட்லி, பாடகி ஜோனிதா காந்தி, வேதிகா, பூஜா ஹெக்டே, நெல்சன் மகன் ஆத்விக், திவ்யபாரதி, சஞ்சனா, ஷிவானி நாராயணன், கீர்த்தி சுரேஷ், சுஜிதா, கனிகா, யுவன் சங்கர் ராஜா, சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்ட பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்தனர்.

தனது நண்பர்களுடன், நடிகை ரித்திகா சிங் பீஸ்ட் அரபிக்குத்து பாட்டுக்கு ஜாலி நடனம் ஆடி உள்ளார். ரித்திகாவின் தந்தை பெயரில் உள்ள Mohan's Planet பாக்ஸிங் பயிற்சி மையத்தில் இந்த நடனம் எடுக்கப்பட்டு இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டுள்ளது. ரித்திகா சிங் நடிப்பில் பாக்ஸர், வணங்காமுடி, கொலை, பிச்சைக்காரன்-2 படங்கள் வெவ்வேறு கட்டங்களில் உருவாகி வெளியாக உள்ளன.