"அவர கோமாளின்னு சொல்றது"... ரியோவின் மனைவி வெளியிட்ட பதிவு... செம வைரல் இப்போ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் Freeze டாஸ்க் நடைபெற்றது. இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில்  வெற்றி பெறும் போட்டியாளர்கள் நேரடியாக இறுதி வாரத்துக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

rio wife shruthi emotional post ரியோவின் மனைவி வெளியிட்ட பதிவு

இந்நிலையில் ரியோவின் மனைவி தற்போது ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது "ரியோவை அவமானப்படுத்தும் விதத்தில் சில கமெண்டுகளில் அவரை கோமாளி என்று அழைப்பதை பார்த்தேன். எனக்கு மிகவும் சந்தோஷம் தான். தன்னுடைய கவலைகளை மறைத்து மற்றவர்களை சிரிக்க வைப்பதற்காக போராடும் ஒருவரை  நான் நேசிக்கிறேன் என்பது எனக்கு பெருமையை.

நீ கோமாளியாவே இரு. மற்றவர்களுக்கு ஒரு ஊன்றுகோலாக இரு. ஒரு சிறந்த பொழுதுபோக்கு கலைஞருக்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய பட்டம் கோமாளி. ஒருவரை சிரிக்க வைப்பது அத்தனை சுலபமல்ல. அவரை கோமாளி என்று அழைக்கும் அனைவரும் அவரது நகைச்சுவை உணர்வை தான் பாராட்டுகிறார்கள். அவர் ஒரு சிறந்த பொழுதுபோக்கு கலைஞர். அன்பை பகிருங்கள். இந்த எதிர்ப்பையும் மீறி நீ ஒளிர வேண்டும் ரியோ" என்று கூறியுள்ளார்.

"அவர கோமாளின்னு சொல்றது"... ரியோவின் மனைவி வெளியிட்ட பதிவு... செம வைரல் இப்போ..! வீடியோ

Tags : Rio, Shruthi

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Rio wife shruthi emotional post ரியோவின் மனைவி வெளியிட்ட பதிவு

People looking for online information on Rio, Shruthi will find this news story useful.