மணிக்கூண்டு டாஸ்க்கில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஆரி, ரியோ, கேப்ரியலா மற்றும் சோம், அர்ச்சனா, சம்யுக்தா ஆகிய 6 பேரும் இதில் கலந்து கொண்டனர். இதற்கான போட்டி நடைபெற்றது. இதில் அர்ச்சனா, ஆரி, ரியோ, சம்யுக்தா ஆகிய நான்கு பேரும் ஏற்கனவே கேப்டன்கள் ஆகி விட்டதால் சோம், கேப்ரியலா இருவரில் ஒருவர் வெற்றி பெறுவார்கள் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால் கேப்ரியலா சிறிது நேரத்திலேயே வெளியேறி விட்டார். ஆரி, ரியோவுக்கு கடுமையான போட்டியை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சோமும் இதில் இருந்து வெளியேறி விட்டார். இதையடுத்து ரியோ, ஆரி இருவரும் போட்டியிட்டனர். ஆரி அசால்ட்டாக இதை டீல் செய்ய ரியோவால் முடியவில்லை. ஒருகட்டத்தில் அவர் வெளியேறி விடுவார் என்பது போல நிலைமை இருந்தது. கிட்டத்தட்ட அவர் வெளியேறி விடுவார் என எதிர்பார்த்த நேரத்தில் ரம்யா ஒரு வார்த்தையை சொன்னார்.
#RioRaj 👍.. #Ramya ❤️. kudutha parunga oru boost word.. Shumma hero maari irukinga rio.. Athoda energy vandurichu rio ku 😁.. Super da 👌#BiggBossTamil4 #BiggBoss4Tamil pic.twitter.com/Mo9XShQhK1
— SATZ Sathiesh (@SataSathiesh) November 20, 2020
அதாவது ரியோ பார்ப்பதற்கு ஹீரோ போல இருக்கிறார் என்பது தான் அது. இதைக்கேட்டதும் ரியோவுக்கு பூஸ்ட் குடித்தது போல ஆகிவிட்டது. சட்டென நிமிர்ந்து நின்று போட்டியை உக்கிரமாக ஆரம்பித்தார். ஆரியின் கேப்டன் சரிந்து விட, ரியோ இரண்டாவது முறையாக கேப்டன் ஆனார். ஒருவேளை ரம்யா அதை சொல்லவில்லை என்றால், ஆரியே இரண்டாவது முறையாக கேப்டன் ஆகி இருக்க வாய்ப்புகள் அதிகம் இருந்தது குறிப்பிடத்தக்கது.