தமிழ் திரைப்பட இயக்குநர் தாமிரா சென்னையில் இன்று காலமானார்.
தமிழ்த் திரைதுறையில் பாரதிராஜா மற்றும் பாலச்சந்தர் ஆகிய இரு துருவங்களை வைத்து திரைபடத்தை இயக்கியவர் தாமிரா. ரெட்டைச்சுழி படத்தில் தான் அந்த மேஜிக் நடந்தது.
இப்படத்தில் ஆரி, அஞ்சலி இருவரும் நடித்திருப்பார்கள். ஆம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற ஆரியின் தொடக்க காலத்தில் உருவான இந்த படத்தை தாமிரா இயக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சமுத்திரக் கனி, ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆண் தேவதை. இந்த படத்தை இயக்கினார் தாமிரா. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் சென்னை அசோக் பில்லரில் உள்ள பிரபல மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த தாமிரா சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.