விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று 'பாக்கியலட்சுமி'. நல்ல டிஆர்பியும் வரவேற்பும் கொண்ட இந்த தொடரில், நாயகன் கோபி, தான் ராதிகாவுடன் தொடர்பில் இருப்பதை தன் மனைவி பாக்கியலட்சுமி மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து மறைக்க பல தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறார்.
இந்த சீரியலில் ராதிகாவாக நடித்து வந்தவர் தான் நடிகை ஜெனிஃபர். பிரபல திரைப்படங்களில் தோன்றிய இவரை, ‘தனியே தன்னந்தனியே’(ரிதம்) உள்ளிட்ட பாடல்களில் நடனம் ஆட கண்டிருப்போம். பின்னர் கலர்ஸ் தமிழின் ‘அம்மன்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலின் புதிய ப்ரோமோவில் ஜெனிஃபர் நடித்து வந்த ‘ராதிகா’ எனும் கேரக்டரில் ஜெனிஃபருக்கு பதில், பிரபல பிக்பாஸ் சீசன் -3 நடிகை, ‘ரேஷ்மா பசுபுலேட்டி’ தோன்றுகிறார்.
அண்மையில் ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான, ‘வணக்கம்டா மாப்ள’ படத்தில் தோன்றிய ரேஷ்மா, முன்னதாக விஷ்ணு விஷாலின்,‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின் மூலமும், பின்னர் 'பிக்பாஸ்' மூலமும் பிரபலமானார். இந்நிலையில் தான், 'பாக்கியலட்சுமி' சீரியலில் மெயின் கதாபாத்திரமாக உருவெடுத்துள்ளார். தவிர, நடிகை ரேஷ்மா, சன் டிவியின் ‘அன்பே வா’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இனி ராதிகாவாக.. 🙂
பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/rFjUnjtf5l
— Vijay Television (@vijaytelevision) July 5, 2021
இதேபோல் ராதிகாவின் மகள் ‘மயூரா’ கதாபாத்திரத்தில் நடித்துவந்த குழந்தை மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக, இனி, ‘ஸ்ருதி’ என்கிற மற்றொரு குழந்தை நடிக்கவுள்ளார்.
ALSO READ: சீரியலிலும் ரஞ்சித்தின் மனைவியாக நடிக்கும் ப்ரியா ராமன்!'.. முதல் சீனே மாஸ் தான்! ப்ரோமோ!