தமிழ் சினிமாவின் ஆதரமாக விளங்கிய தியேட்டர்கள் தற்போது கொரோனா வைரஸால் மோசமான நிலையை சந்தித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் பல்வேறு துறைகள் முடங்கி போயிருக்கின்றன. இதில் சினிமாத்துறையும் அடக்கம். கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சினிமா படப்பிடிப்புகளும், படங்களின் ரிலீஸும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் சினிமாத்துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது சினிமா தியேட்டர்கள் மூடியிருப்பது ரசிகர்களுக்கு மற்றுமொரு கவலையைத்தான் கொடுத்துள்ளாது. கொரோனா வைரஸ் பாதுகாப்பு காரணமாக மூடப்பட்ட தியேட்டர்கள், இன்று 100-வது நாளாக மூடப்பட்டுள்ளது. பல திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடி, 100-வது நாள் போஸ்டர்களை தியேட்டர்களில் காணும் ரசிகர்கள், தற்போது தியேட்டர்கள் மூடப்பட்டு 100-வது நாள் ஆகிறது எனும் செய்தியை கேள்விப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை தந்திருப்பதை சமூக வலைதளங்களில் காணமுடிகிறது.
என்ன நீங்களும், தியேட்டர் கொண்டாட்டங்களை மிஸ் பண்றீங்களா..?!!