விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை. இதில் சின்னத்திரையை சேர்ந்த பல ஜோடிகள் ஜோடிகள் பங்குபெற்று வித்தியாசமான போட்டிகள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல பாடகி ரம்யா மற்றும் அவரது கணவர் இந்நிகழ்ச்சியில் சிறப்பாக பங்கேற்று வந்தனர்.
இரண்டு வாரங்கள் திடீரென அவர்கள் பங்கு பெறாத நிலையில் நேற்றைய தினம் செமி பைனல்ஸிலும் பங்கு கொள்ளவில்லை. இந்நிலையில் இதற்கான காரணம் என்ன என்பதை அவர் தற்போது வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது "இரண்டாம் இடத்தை பிடித்துள்ளோம் என்பதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தோம். சீரியஸாக 2 ரவுண்டுகள் தான் தாண்டுவோம் என்று நினைத்தோம். எல்லா அன்பிற்காகவும் நன்றி. எனக்கு சிறிய வைரல் ஜுரம் இருந்ததால் தான் நாங்கள் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கு கொள்ள முடியவில்லை. தற்போது சுகம் அடைந்து வருகிறேன்" என்று கூறியுள்ளார்.