பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் சரியாக ரம்யாவின் தவறை சுட்டிக்காட்டி கமல் அவரை வறுத்தெடுத்தார். இதேபோல கேப்ரியலா, சோம், ஷிவானி காப்பாற்றப்பட்ட பின்னர் தான் ரம்யா காப்பாற்றப்பட்டார். அப்போது கூட கமல் நேரடியாக சொல்லவில்லை. ஆஜீத் வெளியேறவும் தான் அது தெரிய வந்தது. இது போதாதென காலராக வந்த சிலம்பரசன் ஏன் ஆரி மாதிரி நேரடியா பேச மாட்றீங்க? என கேள்வி கேட்டார்.
பின்னர் ஷிவானியுடன் அமர்ந்து இதுகுறித்து ரம்யா பேசிக்கொண்டு இருந்தபோது ஷிவானி சரியாக ஆரி பாயிண்டை எடுத்து பேச, ஆரி பத்தி காலர் பேசினாரா? என ரம்யா ஷாக்காகி விட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஆரிக்கு வந்த காலர் பேசுனது எல்லாம் வச்சு எப்படி கிண்டல் பண்ணீங்க? இப்போ உங்களுக்கு வந்த காலர் பேசுனதை ஒழுங்கா கேட்கலையா? என கிண்டலடித்து வருகின்றனர்.
#Aari ku call vanthapo ovoru pointum avlo clear ah #Ramya note panni #Balaji kooda irunthu Ambi word discuss paninaanga ..
But Today #Aari name antha caller mention paninathu nypagamea illanu solranga #Shivani kitta Athu epdi maranthu pogum 🤔 ..#BiggBossTamil #BiggBossTamil4 pic.twitter.com/H1orKJjBin
— ҡαωsiкα (@Bubbly_Girl__) January 3, 2021
நேற்று நடைபெற்ற நாமினேஷன் படலத்திலும் இந்த விஷயத்தை சுட்டிக்காட்டி கேப்ரியலா ரம்யாவையும், பாலாஜியையும் நாமினேட் செய்தது குறிப்பிடத்தக்கது. இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன இந்த வாரம் இவ்ளோ உக்கிரமா இருக்காங்க எல்லாரும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.