கடந்த வாரம் நாமினேஷனில் நிஷா, பாலாஜி, அனிதா, சனம், சோம், ஜித்தன் ரமேஷ் மற்றும் ஆரி ஆகியோர் இடம் பெற்றனர். இதற்கிடையில் பிக்பாஸ் ஆபர் ஒன்றை வழங்கினார். அதாவது டாப்பிள் கார்டு ஒன்று வழங்கப்படும் அதை யார் கைப்பற்றுகிறார்களோ அவர்கள் வேறு ஒருவரை நாமினேட் செய்யலாம் என்பது தான் அந்த ஆபர். இதில் நாமினேட் ஆன 7 பேரும் போட்டியிட்டனர்.
ஒருகட்டத்தில் பாலாஜி, ஆரி, சோம், ஜித்தன் ரமேஷ் ஆகிய மூவரும் தங்களுக்கு கார்டு வேணாம் என ஒதுங்கி விட்டனர். அனிதா, நிஷா இருவரில் ஒருவருக்கு அந்த கார்டு கிடைக்க வாய்ப்பு இருந்தது. இதில் நிஷா கார்டை வேண்டாம் என அனிதாவுக்கு கொடுத்து விட்டார். இதையடுத்து அனிதா தனக்கு பதிலாக சம்யுக்தாவை நாமினேட் செய்தார். வாக்குகள் அடிப்படையில் இந்த வாரம் சம்யுக்தா வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார்.
😂😂😂 #BiggBossTamil4 pic.twitter.com/9R5qgmEj4K
— 🌹ரோஜா 💐 (@Roja_Rose21) November 29, 2020
ஜித்தன் ரமேஷ் அல்லது நிஷா இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சம்யுக்தாவின் வெளியேற்றம் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் இதுக்கு எல்லாம் நிஷா தான் காரணம். அவர் மட்டும் அந்த கார்டை அனிதாவுக்கு கொடுக்காம இருந்திருந்தா, இப்போ சம்யுக்தா எவிக்ட் ஆகி இருக்க மாட்டாங்க என 'வின்னர்' படத்தின் மீம் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.