RC15 படத்தின் நியுசிலாந்து படப்பிடிப்புக்காக நடிகர் ராம் சரண் தயாராகி வரும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
Also Read | BREAKING: வாரிசு 'ரஞ்சிதமே' பாட்டுக்கு அடுத்து ரிலீஸாகும் 2-வது சிங்கிள்.. எப்போ? செம்ம
RC15 படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுக்கரசு ISC இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை கீரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராம்சரணுடன் 'வினயவிதேயராமா' படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். ராம்சரண்- கீரா அத்வானியுடன் நடிகர்கள் ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரி அருகே உள்ள தோசகாயலபள்ளி கிராமத்தில் நடந்தது. பின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் விசாகப்பட்டினத்தில் நடந்தது.
சமீபத்தில் இந்த படப்பிடிப்பில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா சில நாட்களுக்கு முன் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரும் இணைந்துள்ளார்.
இந்த படத்தின் வட அமெரிக்கா (அமெரிக்கா & கனடா) நாடுகளின் திரையரங்க ரிலீஸ் உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனம் Shloka Entertainments கைப்பற்றி உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பாடல் படப்பிடிப்பு நியுசிலாந்து நாட்டில் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக படக்குழுவினர் நியுசிலாந்து புறப்பட உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகப்பெரிய பொருட்செலவில் இந்த பாடல் உருவாக உள்ளது.
இந்நிலையில் இந்த நியுசிலாந்து படப்பிடிப்புக்காக நடிகர் ராம் சரண், வித்தியாசமான லுக்கில் தயாராக உள்ளார். இதற்காக பிரபல ஸ்டைலிஸ்ட் ஆன ஆலிம் ஹக்கீம் உடன் ஆலோசனை செய்யும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ராம் சரணின் தோற்றம் ரசிகர்களை கவரும் என்று ஆலிம் ஹக்கீம் ட்வீட் செய்துள்ளார்.
Having a blast with our Super Duper ⭐️ @AlwaysRamCharan . Amazing discussions on different looks for the New Zealand schedule of 🎥 #RC15 #SVC50 directed by the one & only @shankarshanmugh sir.
All these looks of RC are gonna blow your mind 🙌 🚀🔥😍@AlwaysRamCharan @AalimHakim pic.twitter.com/xMm51hYA8V
— Aalim Hakim (@AalimHakim) November 24, 2022
Also Read | 'வாரிசு' படப்பிடிப்பில் யானைகள்.. தயாரிப்பாளருக்கு இந்திய விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்!