Naane Varuven M Logo Top
PS 1 M Logo Top
www.garudavega.com

"வெக்க வெக்கமா வருதே".. ANNIVERSARY -க்கு மகாலட்சுமி வாழ்த்து..!! ரவீந்தர் VIRAL ரிப்ளை‌..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வந்தவர் ரவீந்தர் சந்திரசேகரன்.

Ravindar mahalakshmi 1 month anniversary viral comment

குறிப்பாக Behindwoods-ல் பிக்பாஸ் குறித்த தமது பார்வையை முன்வைக்கும் நிகழ்ச்சியை வழங்கிவந்த ரவீந்தர், FATMAN என்கிற அடையாளத்தால் இணையவழி நிகழ்ச்சிகளில் அறியப்படுவர். கடைசியாக ரவீந்தர் தயாரிப்பில் சாந்தனு பாக்கியராஜ், அதுல்யா ரவி நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை சமீபத்தில் ரவீந்தர் திருமணம் செய்து கொண்டார்.

முன்னதாக, யாரிடமும் தெரிவிக்காமல் திடீரென இவர்கள் திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்ட நிலையில், ரவீந்தர் - மகாலட்சுமியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வந்தது. மேலும், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள், புது ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

Ravindar mahalakshmi 1 month anniversary viral comment

இவர்களின் திருமணம் தொடர்பாக பல விதமான கருத்துக்களும், விமர்சனங்களும் இணையத்தில் வேகமாக பரவ தொடங்கியது. அந்த சமயத்தில், Behindwoods சேனலுக்கு அளித்திருந்த பேட்டியில், ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஆகியோர், தங்களை குறித்து விமர்சனம் அனைத்திற்கும் தெளிவான விளக்கங்களை பதிலடியாக கொடுத்திருந்தனர்.

ஒரு புறம் தங்களை பற்றிய கருத்துக்கள் அடிக்கடி எழுந்து கொண்டே இருந்தாலும், அதனை காதில் போட்டுக் கொள்ளாமல் தங்களின் திருமண வாழ்வை மிகவும் அசத்தலாக கழித்து வருகின்றனர். அதே போல, அவ்வப்போது தாங்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஆகியோர், சோஷியல் மீடியாவில் பகிர்ந்தும் வருகின்றனர்.

Ravindar mahalakshmi 1 month anniversary viral comment

இந்த நிலையில், தற்போது ரவீந்தர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படமும், அதற்கு மகாலட்சுமி போட்ட கமெண்ட் தொடர்பான விஷயமும் பேஸ்புக்கில் அதிகம் வைரலாகி வருகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஆகியோருக்கு திருமணமான நிலையில், இதனை குறிப்பிட்டு ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் ரவீந்தர் பகிர்ந்தார். மேலும், "ஒரு மாத Anniversary. எங்களை பார்த்து சிரிக்க மக்களுக்கு 100 காரணங்கள் இருக்கும். ஆனால், எனது சந்தோசத்திற்கு ஒரே ஒரு காரணம் தான். அது நீ. லவ் யூ "முயலு" என ரவீந்தர் குறிப்பிட்டுள்ளார்.

Ravindar mahalakshmi 1 month anniversary viral comment

இதில், கமெண்ட் செய்த மகாலட்சுமி, "ஹாப்பி Anniversary அம்மு. எனது மகிழ்ச்சிக்கு காரணம் நீங்கள் தான். லவ் யூ டூ மேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Ravindar mahalakshmi 1 month anniversary viral comment

இதற்கு Reply செய்த ரவீந்தர், "ஐயோ, நான் வெட்கப்படுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான பதிவு மற்றும் கமெண்ட்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ravindar mahalakshmi 1 month anniversary viral comment

People looking for online information on Anniversary, Mahalakshmi, Ravindar Chandrasekaran will find this news story useful.