www.garudavega.com

"போதும்டி.. இதுக்குமேல என்னால முடியலடி.!!".. மகாலஷ்மிக்கு ரவீந்தரின் வைரல் லவ் லெட்டர்..!❤️

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் சில திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வந்தவர் ரவீந்தர் சந்திரசேகரன்.

Ravindar Chandrasekaran Lovely Post about Mahalakshmi

Images are subject to © copyright to their respective owners.

Also Read | LEO படத்தின் காஷ்மீர் ஷூட்டிங்.. காதலர் தினத்தில் த்ரிஷா பகிர்ந்த சூப்பர் போட்டோஸ்!

குறிப்பாக Behindwoods-ல் பிக்பாஸ் குறித்த தமது பார்வையை முன்வைக்கும் நிகழ்ச்சியை வழங்கிவந்த ரவீந்தர், FATMAN என்கிற அடையாளத்தால் இணையவழி நிகழ்ச்சிகளில் அறியப்படுவர்..  இவர் பிரபல சீரியல் நடிகை விஜே மகாலக்ஷ்மியை செப்டம்பர் 1, 2022-ல் திருமணம் செய்துகொண்டார்.

அண்மையில் பிஹைண்ட்வுஸ் பேட்டி ஒன்றில் பேசிய ரவீந்தர், “மகாலஷ்மியை திருமணம் செய்த பிறகு நடந்த நல்ல விஷயங்களில் ஒன்று, முன்பெல்லாம் திரைப்படங்களை பண்ணுவேன், பணத்தை பார்க்க முடியாது.. இப்போது பணம் பார்க்க முடிகிறது. என்ன இது.. பணமெல்லாம் பார்க்கிறோம் என்று நினைத்தேன். அந்த அளவுக்கு வாழ்க்கை மாறி இருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் காதலர் தினமான பிப்ரவரி 14-ஐ முன்னிட்டு தமது பதிவில், “காதல்..! வெற்றி பெற இது போட்டியும் அல்ல வெற்றிக்கான அடையாளம் திருமணமும் அல்ல. காதல்..! உன் வாழ்நாள் முழுவதும் நீ சுவாசிக்கும் மூச்சு. தன்னை நேசிக்க மறந்த ஒருவனால் இன்னொரு மனிதனை நேசிப்பது கடினம். அப்படி உன்னை நேசிக்கும் நீ காதலுக்கான அடிப்படை தகுதி பெற்றவன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பது காதல்னு சொல்வாங்க. ஆனா நிறைய எதிர்பார்ப்புகளும் இருக்கும் நிறைய விஷயங்கள் நம்ம எதிர்பார்ப்ப மீறியும் இருக்கும். அப்படி எல்லா நேரத்திலும் நம் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாய் இருந்தாலும் எந்த கணத்திலும் ஒரு நொடி கூட அந்த காதல் குறையாம இருந்தா அது தான் உண்மையான காதல்.

Ravindar Chandrasekaran Lovely Post about Mahalakshmi

Images are subject to © copyright to their respective owners.

என் மகாலக்ஷ்மியோட காதல் அவ்வளவு உண்மையான காதல். அப்போ என்னோட காதல் உண்மையான காதலா இல்லையானு கேக்குறீங்களா? என்னோட காதல் அவ்வளவு உண்மையான காதல் இல்லைங்க. நா மகாலக்ஷ்மிய காதலிச்ச போது இருந்த காதல் அவ்வளவு உண்மை இல்லைங்க. நா Mrs. மகாலக்ஷ்மி ரவீந்திர காதலிக்கும் போது அதுல 1% கூட பொய் இல்லைங்க. ஒரு வாழ்க்கை அழகா தெரியிறதும் ஒரு வாழ்க்கைய அழகா வாழ்றதும் நாம அடுத்தவங்க மேல வைக்குற மரியாதையும் காதல்னாலயும் தான். அப்படி எங்க ரெண்டு பேருக்கும் ரெண்டு பேரு மேலயும் அதிக மரியாதையும் காதலும் இருக்கு.

நாம நேசிக்கிற மக்கள விட நம்மல நேசிக்கிற மக்கள love பண்றதுதான் life. அந்த life தான் என் wife. Happy valentine's day dear mahalakshmi❤️💐 போதும்டி இதுக்குமேல என்னால முடியலடி. எவ்ளோ யோசிச்சாலும் இவ்ளோதான் வருது😲😜” என குறிப்பிட்டுள்ளார்.

Also Read | வெற்றிகரமாக முடிந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை.! இவ்ளோ பேர் உதவியிருக்காங்களா? நன்றி சொன்ன நடிகர் பொன்னம்பலம்.!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ravindar Chandrasekaran Lovely Post about Mahalakshmi

People looking for online information on Mahalakshmi, Ravindar Chandrasekaran, Valentines Day will find this news story useful.