www.garudavega.com
iTechUS

THALAPATHI67 -ல் பிரபல நடிகர்.! “சக்கு சக்கு வத்திக்குச்சி ON BOARD” - பிரபல இயக்குநரின் வைரல் பதிவு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் & லோகேஷ் கனகராஜ் இணையும் தளபதி 67 படத்தில் இயக்குனர் மிஷ்கின் இணைந்துள்ளார்.

Rathnakumar mansoor alikhan Lokesh Kanagaraj thalapathy 67

                     Images are subject to © copyright to their respective owners.

Also Read | பரவசம் அடைந்த ரசிகர்.. “போய் .. வேலைய பாருங்க.. அதான் முக்கியம்” .. குணமா சொன்ன ரஜினி.!

நடிகர் விஜய் நடிப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் தளபதி 67 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது.

ராக்ஸ்டார் அனிருத், தளபதி 67 படத்திற்காக நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய,  படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

Images are subject to © copyright to their respective owners.

த்ரிஷா, ப்ரியா ஆனந்த், இயக்குநர் மிஷ்கின் மற்றும் பலர் இணைந்துள்ள இப்படத்தின் சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார். இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்த படத்திற்கு வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.  மாஸ்டர் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜூடனும் விஜய்யுடனும் இந்த படம் மூலம் வசனகர்த்தாவாக ‘மேயாத மான்’, ‘ஆடை’, ‘குளுகுளு’ படங்களை இயக்கிய ரத்னகுமார் இணைகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே இப்படத்தின் நடிகர் மன்சூர் அலிகான் இணைவதாகவும் அதிகாரப்பூர்வ போஸ்டருடன் கூடிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை பகிர்ந்துள்ள இயக்குநர் ரத்னகுமார், “சக்கு சக்கு வத்திகுச்சி ” என குறிப்பிட்டு மன்சூர் அலிகானுடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். இதேபோல் மன்சூர் அலிகான் இணையும் அறிவிப்பு போஸ்டரில், “யாணும் இணைந்தேன், தளபதி67-ல்.. லோகேஷ் நீ ஆர்பரித்தெழு.. திரையில் விரைவில் சந்திப்போம் மக்களே” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read | அச்சு அசல் நடிகை சௌந்தர்யா போலவே இருக்கும் பெண்..! ட்ரெண்ட் ஆகும் ரீல்ஸ் & ஃபோட்டோஸ்.!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Rathnakumar mansoor alikhan Lokesh Kanagaraj thalapathy 67

People looking for online information on Lokesh Kanagaraj, Mansoor Alikhan, Rathnakumar, Thalapathy 67, Vijay will find this news story useful.