'மேயாத மான்' படத்துக்கு பிறகு ரத்ன குமார் இயக்கியுள்ள படம் 'ஆடை'. அமலா பால் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் டீஸர் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த படத்துக்கு பிரதீப் குமார் இசையமைக்க, இந்த படத்தில் விஜே ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஸ்டுடியோ சார்பில் விஜி சுப்ரமணியன் தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு சென்சார் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்த படத்தின் இயக்குநர் ரத்ன குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். ஆடை பட டீஸரின் வடிவேலு வெர்ஷனான அதனை அவர் வெளியிட்டு, இப்போது எல்லாவற்றுக்கும் வடிவேலு வெர்ஷன் வருகிறது. ஆடை ஒன்றும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த படம் சுதந்திரம் பற்றி பேசுகிறது. பேச்சு சுதந்திரமாக இதனை மதிக்கிறேன். மன்னிச்சிடுங்க அமலா பால். என்று தெரிவித்துள்ளார்.
Nowadays there is Vadivelu version for every content. #Aadai is not a exception. This is hilarious 😜😆and i couldn't resist myself from sharing. Since the movie gonna talk abt freedom . I respect this "Freedom of speech". Sorry @Amala_ams 😏 pic.twitter.com/h2cT3hSBbU
— Rathna kumar (@MrRathna) June 20, 2019