வைபவ், ப்ரியா பவானி ஷங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா நடிப்பில் உருவாகி ஹிட் ஆன திரைப்படம் மேயாத மான்.
இந்த படத்தை இயக்கியவர் தான் ரத்னகுமார். இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து அமலாபால், விவேக் பிரசன்னா, ‘வட’ சரித்திரன் மற்றும் பலர் நடிப்பில் ரத்னகுமார் இயக்கிய திரைப்படம் ஆடை.
இந்த திரைப்படத்தில் அமலாபால் ஒரே இடத்தில் ஆடையின்றி சிக்கிக்கொள்வது போலான கதைக்கரு, மிகவும் நாகரீகமான முறையில் படமாக்கப்பட்டிருக்கும். சவாலான ஒளிப்பதிவு நிறைந்த காட்சிகள் இந்த படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
இந்த திரைப்படத்தினை இயக்கிய பின்னர் ரத்னகுமார் இளைஞர்களிடையே முக்கியமான இயக்குநராக தடம் பதித்தார். இந்நிலையில் தான் தற்போது தன்னுடைய வீட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது பற்றி உருக்கமான ஒரு பதிவினை பதிவிட்டு இருக்கிறார் ரத்னகுமார்.
அந்த பதிவில், தன் வீட்டில் கிட்டத்தட்ட 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதனால், தான் நீண்ட நாட்கள் மன உளைச்சலில் இருந்ததாகவும் தற்போதுதான் அதிலிருந்து மீண்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா. அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் Hospitalize செய்யப்பட்டு தேரினர். கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து இன்று மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது வீடு🙏 🙏
— Rathna kumar (@MrRathna) May 29, 2021
இதுபற்றி அவர் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அந்த பதிவில், “15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா. அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் Hospitalize செய்யப்பட்டு தேரினர். கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து இன்று மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது வீடு” என்று குறிப்பிட்டிருக்கிறார்.