நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் Kirik Party படத்தில் அறிமுகமானார். தெலுங்கில் "சலோ" படத்தில் 2018 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார். பின்னர் அதே ஆண்டு வெளியான "கீதா கோவிந்தம்" திரைப்படம் அவரை இந்திய அளவில் புகழ் பெற வைத்தது.
2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உடன் ஜோடி சேர்ந்த Sarileru Neekevvaru படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியானார். தமிழில் இந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான "சுல்தான்" படத்தின் மூலம் அறிமுகமானார். கடந்தாண்டு அல்லு அர்ஜூனுடன் "புஷ்பா" படத்தில் நடித்து இந்திய முழுக்க முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் 2 கோடி ரசிகர்கள் பின் தொடரும் முதல் தென்னிந்திய நடிகை என்ற சாதனையை படைத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. மேலும் தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்திலும், விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்து வருகிறார். இந்த வாரிசு படத்தின் படப்பிடிப்பு தற்போது தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் டைகர் ஷெராப் உடன் இருக்கும் புதிய போட்டோவை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக நடிகை ராஷ்மிகா மந்தனா & டைகர் ஷெராப் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளனர் என வதந்திகள் பரவின. இந்நிலையில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து "வதந்திகள் அனைத்தும் உண்மை தான். நானும் டைகர் ஷெராப்பும் ஒரு புதிய விளம்பர படத்தில் நடிக்கிறோம். டைகருடன் சேர்ந்து வேலை செய்யும் தருணத்தை எதிர் நோக்கி உள்ளேன்" என ராஷ்மிகா கூறியுள்ளார்.