ராஷ்மிகா மந்தனா மாலத்தீவிற்கு இன்பச்சுற்றுலா சென்றுள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் Kirik Party படத்தில் அறிமுகமானார். தெலுங்கில் "சலோ" படத்தில் 2018 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார். பின்னர் அதே ஆண்டு வெளியான "கீதா கோவிந்தம்" திரைப்படம் அவரை இந்திய அளவில் புகழ் பெற வைத்தது.
2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உடன் ஜோடி சேர்ந்த Sarileru Neekevvaru படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியானார். தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான "சுல்தான்" படத்தின் மூலம் அறிமுகமானார். கடந்தாண்டு அல்லு அர்ஜூனுடன் "புஷ்பா" படத்தில் நடித்து இந்திய முழுக்க முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார்.
ராஷ்மிகா மந்தனா & அமிதாப் பச்சன் நடிக்கும் 'குட்பாய்' படம் கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.சமீபத்தில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் 3.36 கோடி ரசிகர்கள் பின் தொடரும் முதல் தென்னிந்திய நடிகை என்ற சாதனையை படைத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
மேலும் தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்திலும், விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்து வருகிறார். இந்த வாரிசு படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் மாலத்தீவு கடற்கரையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா மாலத்தீவில் உள்ள வேலனா தீவு விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பிரபல Ozen Reserve Bolifushi கடற்கரை ஓட்டலில் தங்கி உள்ளார். இந்த ஹோட்டலில் ஒரு நாள் தங்குவதற்கான வாடகை மட்டும் இந்திய பண மதிப்பில் சுமார் 1,40,000 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இந்த ஹோட்டல் பொலிபிஸி மாலி தீவில் அமைந்துள்ளது.