பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது மாலத்தீவில் இன்பச்சுற்றுலாவில் உள்ளார்.
Also Read | பாடகி சைந்தவியின் புதிய பரிமாணம்.. சென்னையில் இன்னொரு அல்ட்ரா மாடர்ன் ரெகார்டிங் ஸ்டுடியோ.!
நடிகை ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் Kirik Party படத்தில் அறிமுகமானார். தெலுங்கில் "சலோ" படத்தில் 2018 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார். பின்னர் அதே ஆண்டு வெளியான "கீதா கோவிந்தம்" திரைப்படம் அவரை இந்திய அளவில் புகழ் பெற வைத்தது.
2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உடன் ஜோடி சேர்ந்த Sarileru Neekevvaru படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியானார். தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான "சுல்தான்" படத்தின் மூலம் அறிமுகமானார். கடந்தாண்டு அல்லு அர்ஜூனுடன் "புஷ்பா" படத்தில் நடித்து இந்திய முழுக்க முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார்.
ராஷ்மிகா மந்தனா & அமிதாப் பச்சன் நடிக்கும் 'குட்பாய்' படம் கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். பொலிபிஸி மாலி தீவில் தற்போது ராஷ்மிகா மந்தனா இருக்கிறார். சுற்றுலாவின் கடைசி நாளில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மாலத்தீவு கடற்கரையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா மாலத்தீவில் உள்ள வேலனா தீவு விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பிரபல Ozen Reserve Bolifushi கடற்கரை ஓட்டலில் தங்கி இருந்தார்.
ராஷ்மிகா மந்தனா, தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்திலும், விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்து வருகிறார். இந்த வாரிசு படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.
Also Read | பூவையார் வாங்கிய விலையுயர்ந்த கார்.. விலை எம்புட்டு? அப்படி என்ன ஸ்பெஷல்? முழு தகவல்