www.garudavega.com

விஜய் வீட்டில் இருந்து வந்த சாப்பாடு.. ருசித்து சாப்பிட்ட ரஷ்மிகா! சமையல் யாருனு பாருங்க 😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் இன்று (11.01.2023) வெளியாகி உள்ளது.

Rashmika Mandanna ate Shobha Chandrasekhar Cooked food

Also Read | அமெரிக்காவில் வசூலை குவிக்கும் 'துணிவு'.. பிரீமியர் ஷோ-ல மட்டும் இத்தனை கோடி வசூலா! OFFICIAL

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசையமைப்பாளர்  எஸ் தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Rashmika Mandanna ate Shobha Chandrasekhar Cooked food

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியாகும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியான தமிழ் பதிப்பு வாரிசு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிகாலை 4 மணி முதல் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

Rashmika Mandanna ate Shobha Chandrasekhar Cooked food

அதே போல் நடிகர் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படமும் அதிகாலை 1 மணி முதல் திரையிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், வாரிசு படத்தின் நடிகை ராஷ்மிகா மந்தனா, நமது Behindwoods  சேனலுக்கு ராஷ்மிகா ரசிகர்கள் விழா நிகழ்வில் கலந்து கொண்டு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், வாரிசு திரைப்படம் குறித்தும், நடிகர் விஜய் குறித்தும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Rashmika Mandanna ate Shobha Chandrasekhar Cooked food

இந்த நிகழ்வில் நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு நடிகர் விஜய் அம்மா ஷோபா சந்திரசேகர் உணவு சமைத்து கொடுத்துள்ளார். மேலும் ஷோபா சந்திரசேகருடன் ராஷ்மிகா தொலைபேசியில் உரையாடினார். ஷோபா சமைத்த சாம்பாரை விரும்பி உண்டு மகிழ்ந்தார். மேலும் தனக்கு சாம்பார் மிகவும் பிடித்த உணவு என கூறி ருசியில் கண்ணை மூடி சாம்பாரை ராஷ்மிகா விரும்பி சுவைத்தார். பின்னர் உணவுகளை தனது உதவியாளர்களிடம் கூறி பார்சல் கட்ட சொல்லி எடுத்து செல்வதாக ராஷ்மிகா கூறினார்.

Also Read | வாரிசு படத்தின் FDFS.. தியேட்டரில் Vibe ஆன TTF வாசன்.. வைரல் வீடியோ!

விஜய் வீட்டில் இருந்து வந்த சாப்பாடு.. ருசித்து சாப்பிட்ட ரஷ்மிகா! சமையல் யாருனு பாருங்க 😍 வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Rashmika Mandanna ate Shobha Chandrasekhar Cooked food

People looking for online information on Rashmika Mandanna, Shobha Chandrasekhar, Varisu will find this news story useful.