நடிகர் அஜித்குமார் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் நாளை (ஆக.8)ம் தேதி ரிலீசாகிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரின் போனி கபூரின் பேவியூ புராஜக்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.
ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகியுள்ள இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்தர், டெல்லி கணேஷ், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி கார், பைக், ஆளில்லா விமானம் இயக்கும் ஏரோ மாடலிங், ஃபோட்டோகிராபி என பலவற்றிலும் ஆர்வம் கொண்ட அஜித்திற்கு துப்பாக்கிச்சுடுவது உள்ளிட்ட விளையாட்டு சம்மந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வம் அதிகம். எந்த ஒரு விளம்பரமும் இன்றி Sports மீதான தனது ஆர்வத்தை நடிகர் அஜித் வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் ஊடகவியலாளரான ரங்கராஜ் பாண்டே, அஜித் உடனான தனது நட்பு குறித்தும், நேர்கொண்ட பார்வை ஷூட்டிங் குறித்தும் பல சுவாரஸ்ய தகவல்களை நம்மிடையே பிரத்யேகமாக பகிர்ந்துக் கொண்டார்.
அப்போது பேசுகையில், நடிகர் அஜித்திற்கு நடிப்பையும் தாண்டி Sports-ல் அதிக ஆர்வம் உள்ளது அனைவருக்கும் தெரிந்தது தான். Sports தான் ஒரு மனிதனை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தும் என்று அஜித் நம்புகிறார். அவரது வாழ்க்கையில் சாதிக்கக் கூடிய விஷயமாக அஜித் கருதுவது என்ன என்பதையும் ரங்கராஜ் பாண்டே பகிர்ந்துள்ளார்.
“Sports விஷயங்கள் இன்னும் பாசிட்டிவாக வாழ்க்கையை வைத்திருக்கும். ஆக அவருடைய ரசிகர்கள் ஏதேனும் ஒரு Sports Activity-ல் அவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது அஜித்தின் விருப்பம். என்னிடம் தனிப்பட்ட முறையில் அவர் கூறியது, ஒரு Sport Academy உருவாக்க வேண்டும் என்பது தான் என்னுடைய Lifetime Ambition என்றார். இளைஞர்களை விளையாட்டில் என்கேஜ் செய்ய வேண்டும் என்று அஜித் விரும்புகிறார்” என ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.