பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்பீர் கபூர், நடிகர்கள் ரிஷி கபூர் மற்றும் நீது சிங் ஆகியோரின் மகன் மற்றும் மூத்த நடிகர் - இயக்குனர் ராஜ் கபூரின் பேரன் ஆவார்.
ரன்பீர் கபூர் ஸ்கூல் ஆஃப் விஷுவல் ஆர்ட்ஸ் மற்றும் லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் மற்றும் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் திரைப்படத் தயாரிப்பையும் நடிப்பையும் முறையாக கற்றவர்.
Also Read | அனுபமா பரமேஸ்வரனா இது? வேறமாரி லுக்கில் புதிய படத்துக்கு அசத்தல் போட்டோஷூட்!
சமீபத்தில் ரன்பீர் கபூர், வாணி கபூர் மற்றும் சஞ்சய் தத்துடன் இணைந்து ஷம்ஷேரா படத்தில் நடித்து இருந்தார்.
தற்போது லவ் ரஞ்சனுடன் ஷ்ரத்தா கபூர் ஜோடியாக பெயரிடப்படாத ஒரு படம், அனிமல் மற்றும் பிரம்மாஸ்திரா படங்கள் ரன்பீர் கபூர் நடிப்பில் வெவ்வேறு நிலையில் தயாராகி வருகின்றன.
இதில் அனிமல் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரலில் (22.04.2022) ஆரம்பமானது. இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இந்த படத்தை இயக்குகிறார். இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, தெலுங்கு அர்ஜுன் ரெட்டியின் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அதன் இந்தி ரீமேக் கபீர் சிங்கின் மூலம் மிகப் பெரிய பிளாக்பஸ்டரை பாலிவுட்டுக்கு வழங்கியவர்.
இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்பீர் கபூருடன் முதல் முறையாக ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து இப்படத்தை டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் இணைந்து தயாரிக்கின்றனர்.
ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகும் அனிமல் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இமயமலையில் தொடங்கியது. அனிமல் படம் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் வெளியிடப்படும் பான் இந்தியா திரைப்படமாகும்.
இந்த படத்தில் ரன்பீருக்கு ஜோடியாக தென்னிந்தியாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தின் தற்போதைய படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனா, புஷ்பா, கீதா கோவிந்தம், சுல்தான் படங்களில் நடித்தவர். தமிழில் தற்போது விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
Also Read | "சீதா ராமம்" ராஷ்மிகா மந்தனா & மிருணாள் பற்றி பேசிய துல்கர் சல்மான்.. முழு தகவல்