ராணா, சாய் பல்லவி, வேணு உடுகுலா நடித்துள்ள விராத பர்வம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
Also Read | நம்ம அரசியலுக்கு போயிருவோமா? சிவகார்த்திகேயனின் ரசிக்க வைக்கும் DON படத்தின் ஜாலி டிரெய்லர்!
ராணா டக்குபதி மற்றும் சாய் பல்லவி நடித்த விராத பர்வம் ஒரு தனித்துவமான உள்ளடக்கம் கொண்ட திரைப்படமாகும், இதில் இந்த ஜோடி இதுவரை பார்த்திராத கதாபாத்திரங்களில் தோன்ற உள்ளனர். இப்படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். விராத பர்வம் ஜூலை 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.
ராணா மற்றும் சாய் பல்லவி இருவரும் காட்டுக்குள் கையைப்பிடித்துக்கொண்டு ஓடுவது போல் போஸ்டர் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. ராணா கையில் துப்பாக்கியுடன் ஆக்ரோஷமாகத் தோன்ற, சாய் பல்லவி அச்சப்படுகிறார்.
இப்படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. குழு மிக விரைவில் பட விளம்பரங்களைத் தொடங்கும். 1990களில் நடந்த உண்மைச் சம்பவங்களிலிருந்து ஈர்க்கப்பட்ட ராணா, ஆரண்யா என்ற புனைப்பெயரால் அறியப்படும் தோழர் ராவண்ணாவின் பாத்திரத்தில் நடிக்கிறார். சாய் பல்லவி, வெண்ணிலாவாக நடிக்கிறார். விராத பர்வம் போரின் பின்னணியில் ஒரு அற்புதமான காதல் கதையை விவரிக்கப் போகிறது.
டி சுரேஷ் பாபு இப்படத்தை வழங்குகிறார், ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரிக்கிறார். சுரேஷ் பொப்பிலி இசையமைக்க, டானி சான்செஸ் லோபஸ் மற்றும் திவாகர் மணி ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். விராத பர்வம் படத்தில் பிரியாமணி, நந்திதா தாஸ், நவீன் சந்திரா, ஜரீனா வஹாப், ஈஸ்வரி ராவ் மற்றும் சாய் சந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
நடிகர்கள்: ராணா டகுபதி, சாய் பல்லவி, பிரியாமணி, நந்திதா தாஸ், நவீன் சந்திரா, ஜரீனா வஹாப், ஈஸ்வரி ராவ், சாய் சந்த், பெனார்ஜி, நாகிநீடு, ராகுல் ராமகிருஷ்ணா, தேவி பிரசாத், ஆனந்த் ரவி, ஆனந்த் சக்ரபாணி மற்றும் பலர்.
படக்குழுவினர்:
எழுத்தாளர் மற்றும் இயக்குனர்: வேணு உடுகுலா
தயாரிப்பாளர்: சுதாகர் செருக்குரி.
நிறுவனம் : சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ்
வழங்குபவர்: சுரேஷ் பாபு
DOP: டானி சான்செஸ் லோபஸ், திவாகர் மணி
எடிட்டர்: ஸ்ரீகர் பிரசாத்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஸ்ரீ நாகேந்திரா
இசை: சுரேஷ் பொப்பிலி
சண்டைக்காட்சிகள்: ஸ்டீபன் ரிச்சர்ட், பீட்டர் ஹெய்ன்
நடனம்: ராஜு சுந்தரம்.
பிஆர்ஓ: வம்சி - சேகர்
நிர்வாக தயாரிப்பாளர்: விஜய் குமார் சாகந்தி
விளம்பர வடிவமைப்பு: தானி ஏலே
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8