நடிகர் ராணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலியான மிஹீகா பஜாஜூடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவர் சம்மதம் தெரிவித்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து அவரது திருமண விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் இருவருக்கும் வருகிற ஆகஸ்ட் 8 ஆம் தேதி திருமணம் என்றும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இருவருக்கும், நெருங்கிய உறவினர்கள் பங்கேற்க மிக எளிமையாக திருமணம் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியானது.
தற்போது திருமண முன்னேற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். மேலும் திருமணத்துக்கு முந்தைய சடங்குகளில் அழகிய உடைகளில் இருவரும் தோன்றும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.