பள்ளிக்காலங்களை நினைவுபடுத்தும் கனா காணும் காலங்கள் டாஸ்கில், பள்ளி மாணவியாக வலம் வந்த அக்ஷராவை தமிழாசிரியராக வந்த ராஜூவும், வார்டனாக வந்த சிபியும் 5 திருக்குறளை குறுகிய நேரத்தில் மனப்பாடம் செய்யச் சொல்லி வலியுறுத்தினர்.
ஆனால் டென்ஷனான அக்ஷரா, “எனக்கு தமிழே வராது.. நான் எப்படி 5 திருக்குறளை கொஞ்ச நேரத்துல மனப்பாடம் செஞ்சு சொல்ல முடியும்? மனப்பாடம் பண்ணா வருமா? சில விஷயங்கள் வந்தால் தான் வரும்,. வர்லன்னா வராது. டைம் ஆகும். ஓவரா பண்றீங்க!” என்று சிபியையும், குறுக்கே சென்ற ராஜூவையும் கடுமையாக விமர்சித்தார்.
அதன் பிறகு அக்ஷராவை பிக்பாஸ் கன்ஃபெஷன் அறைக்கு அழைத்து பேசினார். அதன் பின் அக்ஷரா நார்மலாகிவிட்டார். எனினும் பள்ளி கால டாஸ்கில் குழந்தை என்பதை மறந்துவிட்டு அவர் நடந்துகொண்டதாக சிபி, நிரூப், பிரியங்கா உள்ளிட்ட பலரும் அக்ஷராவின் மீது விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த நிலையில்,கொரோனா மற்றும் சுவாச பாதைத் தொற்றால் சிகிச்சை எடுத்துக்கொண்டுவரும் நடிகர் கமல்ஹாசனுக்கு உதவி செய்யும் வகையில் ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கத் தொடங்கியுள்ளார்.
அதன்படி, தற்போது ரம்யா கிருஷ்ணன் நவம்பர் 28-ஆம் தேதி ஞாயிறு எபிசோடில், பள்ளிக்கால டாஸ்கில் ஆசிரியர்களாக இருந்த ராஜூ,சிபி, அபிஷேக், அமீர் ஆகியோருக்கு திருக்குறள்களை கொடுத்து மனப்பாடம் செய்து சொல்லச் சொல்கிறார்.
அவர்களோ திணறுகிறார்கள். அதிலும் குறிப்பாக நம் அபிஷேக், “எனக்கு தண்டனையே கொடுத்துருங்க தாயீ” என்பது போல் சரண்டர் ஆகிவிடுகிறார். ராஜூவோ, தனக்கு குறளே வராது.. தெரியாது என்று நழுவிவிடுகிறார். ஆனால் இந்த விவகாரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு அன்று ஒருநாள் முழுவதும் டென்ஷனாக இருந்த அக்ஷராவிடமே ரம்யா கிருஷ்ணன் என்ன தண்டனை கொடுக்கலாம் என கேட்கிறார்.
அதற்கு அக்ஷரா, “இவங்களெ வெளில படுக்க வெச்சிடுங்க” என சிரித்தபடி கூறுகிறார். அன்றைய நாளில் அக்ஷரா சிந்திய கண்ணீருக்கு இப்போது பதில் கிடைத்துவிட்டதாக அக்ஷரா ஆர்மி படுகுஷியில் உள்ளனர்.