பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளராக திகழ்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். பொதுவாக அமைதியா இருந்தாலும், பேச வேண்டிய இடத்தில் தனது கருத்தை நறுக்கென சொல்லி விடுகிறார். பாலாஜி கூறும்போது கூட "ஆண்களுக்கு பெண்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதற்கு ரம்யா ஒரு சிறந்த உதாரணம் என்று கூறியிருந்தார். அப்படி தனது சாதுர்ய குணத்தினால் பல சூழ்நிலைகளை சுமுகமாக மாற்றுவது அவருக்கே உரிய தனித்திறமை.
ரம்யா பாண்டியன் நான்காம் இடத்தை பிடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் வீடு திரும்பிய ரம்யா பாண்டியனுக்கு அவரது குடும்பத்தினர் ஏகோபித்த வரவேற்பு அளித்துள்ளனர். மேளம் தட்டி, பட்டாசு வெடித்து, கேக் வெட்டி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவரது தம்பி பரிசு பாண்டியன் "போட்றா வெடிய! ரம்யா பாண்டியனின் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல, அவரை நான் சிறப்பாகவும் பாஸிடிவாகவும் வரவேற்றுள்ளேன். உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.