பிக்பாஸ் வீட்டில் ஆரிக்கும், ரம்யா பாண்டியனுக்கும் இடையில் ஏதாவது பிரச்சினை நடந்ததா? இல்லை ஆரியின் பேச்சு ரம்யாவுக்கு பிடிக்கவில்லையா? என்பது தெரியவில்லை. அவர் தொடர்ந்து ஆரியை கிண்டலடித்து வருகிறார். முன்பு ஏதாவது பிரச்சினை நடந்து அதில் ஆரி சம்பந்தப்பட்டு இருந்தால் ரம்யா சரியான பாயிண்டை பிடித்து ஆரியை கேள்வி கேட்பார்.
Ramya carries a flight ✈️ on #Aari, not just a baggage.
Aari always talk about the game stretagy. Not about anyone's personals.
But Ramya wants Aari to wear nighty, girl make up, commenting dressing & mocking behind Shivani & Aari. So cheap!#BiggBossTamil4
— Sumathi Selvaraj (@SumathiSelvar12) December 11, 2020
நேற்றும் இதேபோல ஒரு வேலையை ரம்யா செய்தார். கார்டன் ஏரியாவில் அர்ச்சனா, நிஷா, ஷிவானி உள்ளிட்டோர் இருந்தபோது ரம்யா கிண்டல் செய்யும் விதத்தில் ஆரி ஒரு அறுவை என்பது போல தானே லிரிக்ஸ் அமைத்து பாட்டு ஒன்றை பாடினார். இந்த பாடலை அர்ச்சனா உள்ளிட்டோரும் ரசித்து சிரித்து மகிழ்ந்தனர். இதைப்பார்த்த ரசிகர்கள் ஏன் அவருக்கு இப்படி எல்லாம் பட்டப்பெயர் வைக்கிறீங்க? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
#BiggBossTamil4 #BiggBossTamil #BiggBoss4Tamil worst contestant ever , how dare she is doing personal attacks always 👎 https://t.co/FRuRdyShEU
— TamilCinemaFan (@TamilCnaFan) December 11, 2020
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இரண்டாவது முறையாக ரம்யா பாண்டியன் பிக்பாஸ் வீட்டின் கேப்டன் ஆகி இருப்பதால், அவரை வரும் வாரம் யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ ரம்யா கமெண்ட்ரியை பிக்பாஸ் பகிரங்கமாக போட்டு கொடுத்தது போல, இதற்கு ஒரு குறும்படம் போடாமல் இருந்தால் சரி!